இப்படிலாம் ஒருத்தர அவமானப்படுத்த கூடாது – பஞ்சாப் நிர்வாகத்தை விளாசும் சஞ்சய் மஞ்சரேக்கர், நடந்தது என்ன

Mayank Agarwal Sanjay Manjrekar
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவிலேயே நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ செய்து வருகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் காலம் காலமாக முதல் கோப்பையை வெல்வதற்கு போராடி வரும் பஞ்சாப் கிங்ஸ் வழக்கம் போல அதிரடியான மாற்றங்கள் என்ற பெயரில் சொதப்பலை செய்துள்ளது.

pbks

பொதுவாகவே ஒரு அணி வெற்றி நடை போட்டு கோப்பைகளை வெல்வதற்கு முதலில் நிலையான கேப்டன் அவசியமாகும். அதற்கு வெற்றி தோல்வி என்பதை தாண்டி முதலில் கேப்டனாக பொறுப்பேற்கும் வீரர் மீது நம்பிக்கை வைத்து குறைந்தது 2 – 3 வருடங்கள் வாய்ப்பளிக்க வேண்டும். ஆனால் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவை உரிமையாளராக கொண்ட பஞ்சாப் அணி எப்போதுமே தோல்விகளால் பதற்றமடைந்து ஜெர்சியையும், பெயரையும் மாற்றுவது போலவே கேப்டன்களையும் மாற்றுவது வழக்கமாகும். அந்த வரிசையில் இந்த வருடம் கர்நாடக இளம் வீரர் மயங் அகர்வால் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

அவமானப் படுத்திட்டாங்க:

ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத அவர் 13 போட்டிகளில் 196 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்ட நிலையில் இதர வீரர்களும் சொதப்பியதால் வழக்கம் போல பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் எப்போதும் போல கேப்டனை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் நிர்வாகம் மயங் அகர்வாலை மொத்தமாக அணியிலிருந்தே வெளியேற்றி அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளது. அப்படி வாம்மா மின்னல் என்ற வகையில் ஒரே வருடத்தில் கேப்டனாக நியமித்து கழற்றி விட்டுள்ள பஞ்சாப் அணியின் அணுகுமுறை சரியில்லை என்று விமர்சித்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் இப்படி ஒரு பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மயங் அகர்வாலை நினைத்து வருந்துவதாக கூறியுள்ளார்.

Agarwal

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மயங் அகர்வாலுக்கு நடந்துள்ளது மிகவும் சுவாரசியமானது. இது போல் ஒரு சீசனில் சுமாராக செயல்பட்டால் உங்களுடைய விலை மதிப்பு உதவாது. இருப்பினும் அவரை விடுவித்து அந்த பணத்தில் அவரை மீண்டும் வாங்க பஞ்சாப் முயற்சிக்கலாம் அல்லது அவரை விட சிறந்த வீரர்களை வாங்க முயற்சிக்கலாம். ஆனால் மயங் அகர்வால் போன்ற மிகவும் மென்மையானவர்களுக்கு இந்த விளையாட்டு உகந்ததல்ல”

- Advertisement -

“அதாவது கடந்த சில வருடங்களாக கேஎல் ராகுலுடன் டாப் ஆர்டரில் அதிரடியாக செயல்பட்ட அவர் பெரிய ரன்களை குவித்தார். சொல்லப்போனால் கடந்த சீசனில் ராகுலை மிஞ்சும் அளவுக்கு பேட்டிங் செய்த அவர் அதிக ரன்களை குவித்த காரணத்தாலேயே இந்த வருடம் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் கேப்டன் பதவியில் அவர் தன்னை நிரூபிப்பதற்கு நீங்கள் இன்னும் ஒரு வருடத்தை கொடுத்திருக்க வேண்டும். இதில் வேதனை என்னவெனில் இந்த வருடம் அணியின் நலன் கருதி மயங் அகர்வால் தன்னுடைய ஓப்பனிங் இடத்தை மற்றொரு வீரருக்கு வழங்கினார். அப்படிப்பட்ட தியாக மனம் கொண்ட அவருக்கு இப்படி நடந்துள்ளது மிகவும் மோசமானதாகும்”

Sanjay

“ஏனெனில் ஓப்பனிங் தவிர்த்து கீழே விளையாடும் போது அழுத்தத்தால் சுதந்திரமாக பேட்டிங் செய்ய முடியாமல் ரன்கள் எடுக்க தடுமாறும் நிலைமை ஏற்படும். ஆனால் அதை தைரியமாக செய்த அவருக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இருப்பினும் அவரைப் போன்ற நல்ல தொடக்க வீரரை அனைத்து அணிகளும் விரும்புவார்கள். ஏனெனில் அவரிடம் வேகம் மற்றும் சுழல் ஆகிய 2 பந்து வீச்சுக்கு எதிராகவும் 150 – 160 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் பெரிய ரன்களை குவிக்கும் திறமை உள்ளது” என்று கூறினார்.

Advertisement