இந்திய அணியில் இவரை சேர்த்தது ரொம்ப தப்பு. மீண்டும் இந்திய வீரரை கடுமையாக விமர்சித்த – சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது. 5 நாட்கள் கொண்ட இந்த போட்டியில் இரண்டு நாட்கள் முழுவதுமாக மழை பெய்தும், மீதமுள்ள நாட்களில் போட்டி அவ்வப்போது தடைபட்டு நடந்தது இப்படி நடைபெற்ற இந்த போட்டியில் எளிதாக இந்திய அணி போட்டியை டிரா செய்து விடும் என்று எதிர்பார்த்த வேளையில் ஏற்பட்ட பேட்டிங்கில் ஏற்பட்ட மோசமான செயல்பாடு காரணமாக இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

nz

- Advertisement -

இந்திய அணி பெற்ற இந்த தோல்விக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வர்ணனையாளர் ஆன சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ரவீந்திர ஜடேஜாவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து மைதானத்தின் சூழ்நிலைகளில் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது முதலில் தவறு.

அதிலும் டாஸ் போட்டு ஒரு நாள் தாமதமாகியும் அணியை மாற்றாதது மற்றொரு தவறு. ஜடேஜாவை ஒரு பேட்ஸ்மேனாக அணியில் நான் ஏற்க மறுக்கிறேன். மேலும் பந்துவீச்சிலும் அஸ்வினுக்கு பக்கபலமாக இருப்பார் என்று நினைத்த வேளையில் அதுவும் நடக்கவில்லை. அவரை பேட்டிங்கிற்க்காகவே இந்த போட்டியில் தேர்வு செய்துள்ளனர்.

jadeja 2

இதுபோன்ற முடிவு எப்போதும் பலனளிக்காது. இந்த முடிவுகள் தான் இந்திய அணிக்கு எதிராக அமைந்துவிட்டது. ஜடேஜாவிற்கு பதிலாக விஹாரியை எடுத்திருந்தால் அவர் நல்ல முறையில் விளையாடி அணிக்கு நிச்சயம் கூடுதல் ரன்களை சேர்த்து கொடுத்து இருப்பார்.

Vihari

அவருடைய ஆட்டத்திறனை ஏற்கனவே நிரூபித்தும் அவரை அணியில் சேர்க்காதது தவறான முடிவாக அமைந்து விட்டது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement