ஐபிஎல் 2022 : பெஸ்ட் பவுலிங் கூட்டணி இவங்ககிட்ட தான் இருக்கு, அதுதான் வெற்றி ரகசியம் – சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டு

Sanjay
Advertisement

பல பரபரப்பான திருப்பங்களுடன் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 3-வது வாரத்தைக் கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் தற்போது முதலாவதாக நடைபெற்று வரும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றில் தேவையான வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக அனைத்து அணிகளும் இப்போது முதலே கடுமையாக போட்டி போட்டு வருகின்றன. இந்த தொடரில் தற்போதைய நிலைமையில் புதிய அணிகளாக விளையாடி வரும் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் அடுத்தடுத்த வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்து எதிரணிகளை மிரட்டி வருகின்றன.

RR vs SRH Preview

அந்த வகையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் தனது முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது. ஆனால் அதற்காக அசராமல் 2-வது வாரத்தில் கொதித்தெழுந்த அந்த அணி நடப்பு சாம்பியன் சென்னையை 3-வது போட்டியில் தோற்கடித்து குஜராத், கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிரான அடுத்த 3 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து 4-வது இடத்திற்கு முன்னேறி புள்ளி பட்டியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஹைதெராபாத் வெற்றி ரகசியம்:
அந்த அணியின் இந்த அடுத்தடுத்த வெற்றிகள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள நிலையில் அந்த அணியின் பேட்டிங்கை விட பந்து வீச்சு மிகுந்த பலமாக திகழ்கிறது. ஏனெனில் பேட்டிங்கில் கேன் வில்லியம்சன், அபிஷேக் சர்மா, நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம் ஆகியோர் மட்டுமே அந்த அணிக்கு இதுவரை ரன்களை எடுத்து வருகின்றனர். அதிலும் கடைசி 2 போட்டிகளில் நிகோலஸ் பூரன் மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோர் மிடில் ஆர்டரில் கடைசி வரை அவுட்டாகாமல் பினிஷிங் செய்து வெற்றியை தேடி கொடுத்தனர்.

Natarajan Nattu SRH

அதிலும் இந்த 4 வீரர்களும் கூட அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்யாமல் தேவையான அளவு அதிரடியை மட்டும் காட்டி ரன்களை எடுத்து ஹைதராபாத் வெற்றிக்கு பங்காற்றி வருகிறார்கள். அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் எதிரணிக்கு அதிக ரன்களை கொடுக்காமல் கச்சிதமாக பந்துவீசி தேவையான அளவு ரன்களை மட்டும் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். அதாவது ஹைதராபாத் பவுலர்கள் தங்களது வேலையை சிறப்பாக செயல்படுவதால் அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சிரமம் எதுவும் ஏற்படுவதில்லை.

- Advertisement -

பலம் சேர்க்கும் பவுலர்கள்:
இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் தான் மிகச் சிறந்த பந்துவீச்சு கூட்டணியை கொண்டுள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஐபிஎல் தொடரில் நமக்கு நிறைய பந்துவீச்சு கூட்டணி உள்ளது என்றாலும் ஹைதராபாத் அசத்துகிறது. அதிலும் மெதுவாக பந்து வீசும் திறமை பெற்ற புவனேஸ்வர் குமாருடன் போட்டியில் எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய நடராஜன் கைகோர்க்க அதிவேகமான பந்துகளை வீசினாலும் விக்கெட் எடுக்கக் கூடியவராக உம்ரான் மாலிக் உள்ளார். அதேபோல் மெக்ரோ யான்சன் தேவையான நேரங்களில் சிறப்பாக செயல்படுகிறார்” என கூறினார்.

Sanjay

அவர் கூறுவது போல சென்னை, மும்பை போன்ற வெற்றிகரமான ஐபிஎல் அணிகளில் உள்ள பவுலர்கள் ஒரே ஓவேரில் 20 – 35 ரன்கள் வரை வாரி வழங்கி கையில் இருக்கும் வெற்றியை கோட்டை விட்டு வருகின்றன. ஆனால் ஹைதெராபாத் அணியை பார்க்கும்போது டாஸ் வென்று முதலில் பந்துவீசும் போதெல்லாம் அதன் பவுலர்கள் எதிரணிகளுக்கு ரன்களை வாரி வழங்காமல் வெறும் 150 – 160 ரன்களுக்கு இடையிலேயே எதிரணியின் கதையை முடித்து விடுகிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் மற்றும் லேட்டஸ்ட்டாக கலக்கி வரும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 145+ கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசக்கூடிய 22 வயது இளம் பவுலர் உம்ரான் மாலிக் ஆகியோருடன் தென்னாப்பிரிக்கா இளம் வேகப்பந்து வீச்சாளர் மேக்ரோ யான்சன் ஆகியோர் தான் ஹைதராபாத் அணியின் வெற்றி ரகசியமாக திகழ்ந்து வருகிறார்கள் என்று மஞ்ச்ரேக்கர் பாராட்டினார்.

Umran Malik Last Over

அதேபோல் தங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முழு சுதந்திரம் அளித்து தேவையான நேரங்களில் கச்சிதமாக பயன்படுத்துவதாகவும் அவர் பாராட்டினார். இதுபற்றி அவர் மேலும் பேசியது வருமாறு. “கேன் வில்லியம்சன் வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக கையாள்கிறார். அதிலும் கடினமான ஓவர்களான 5, 14, 16, 18 போன்றவர்களை நடராஜனிடம் வழங்குகிறார்.

இதையும் படிங்க : தீபக் சாஹருக்கு பதில் அவரா? நிராகரித்த கேப்டன் ஜடேஜா – இந்த முடிவு எங்க போயி நிக்கப்போகுதோ?

அதேபோல் புவனேஸ்வர் குமார் 1, 3, 17, 19 போன்றவ ஓவர்களை வீசுகிறார். இப்படி இந்த 2 அனுபவம் வாய்ந்த பவுலர்கள் சிறப்பாக செயல்படுவது இதர 2 இளம் பவுலர்களையும் சிறப்பாக செயல்பட உதவுகிறது” என்று கூறினார்.

Advertisement