தீபக் சாஹருக்கு பதில் அவரா? நிராகரித்த கேப்டன் ஜடேஜா – இந்த முடிவு எங்க போயி நிக்கப்போகுதோ?

Deepak
- Advertisement -

சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் கடந்த சில ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பந்துவீச்சு துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா காலத்தில் அவரை 14 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் அவர் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

deepak

- Advertisement -

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த ஐபிஎல் தொடர் துவங்கும் முன்னர் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரின் போது காயமடைந்த தீபக் சாஹர் இத்தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டது. இருப்பினும் ஏப்ரல் மாத இறுதியில் சென்னை அணியுடன் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சையினை மேற்கொண்டு வந்த அவருக்கு முதுகுப்பகுதியில் மேலும் ஒரு காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் அடுத்த நான்கு மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகிறது. இதன் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அவரும் அதிகாரபூர்வமாக வெளியேறினார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. அதே போன்று இந்திய அணியின் சீனியரான இஷாந்த் ஷர்மா சிஎஸ்கே அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது.

deepak

ஏனெனில் தற்போது மும்பை மற்றும் புனே மைதானங்களில் நடைபெற்று வரும் போட்டியில் டெஸ்ட் மேட்ச் பவுலர்களுக்கு மைதானம் மிகவும் ஒத்துழைப்பு தந்து வருகிறது. இதனால் இஷாந்த் சர்மாவை கொண்டுவர சிஎஸ்கே நிர்வாகம் முடிவு எடுத்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த விடயம் குறித்து தற்போது பேசியுள்ள சிஎஸ்கே அணியின் முக்கிய நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறுகையில் : தீபக் சாஹர் விஷயத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

- Advertisement -

ஏற்கனவே நாங்கள் மாற்று வீரர்களை தேர்வு செய்து அணி குழுவிடம் தெரிவித்தோம். ஆனால் கேப்டனிடம் இருந்தோ, தேர்வு குழுவிடம் இருந்தோ எந்த பதிலும் வரவில்லை. இதன் காரணமாக தற்போது சிஎஸ்கே அணியில் எந்த புது வீரரும் வேண்டாம் என்ற முடிவிலேயே இருப்பது போல் தெரிகிறது. எனவே தீபக் சாஹருக்கு பதிலாக இசாந்த் சர்மா மட்டுமல்ல எந்த வீரரும் விளையாட மாட்டார்கள் என்பது போல காசிவிஸ்வநாதன் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 5 வருஷத்திற்கு பிறகு கிங் கோலிக்கு ஏற்பட்ட மோசமான நிகழ்வு – என்ன ஆச்சு நம்ம ஆளுக்கு?

ஏற்கனவே இந்த ஆண்டு சிஎஸ்கே பேட்டிங்கில் 200 ரன்கள் அடித்தால் கூட பந்துவீச்சின் போது எதிரணியை சுருட்ட மிகவும் கஷ்டப்பட்டு வரும் வேளையில் கூடுதல் பவுலரை சேர்க்காமல் தற்போது எக்ஸ்ட்ரா பவுலரே வேண்டாம் என்று மறுப்பது எந்த அளவுக்கு பலனளிக்க போகிறது என்பது போகப்போக பார்த்தால் மட்டுமே தெரியும்.

Advertisement