5 வருஷத்திற்கு பிறகு கிங் கோலிக்கு ஏற்பட்ட மோசமான நிகழ்வு – என்ன ஆச்சு நம்ம ஆளுக்கு?

kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே ஒரு சோதனையான காலகட்டம் அமைந்து வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசுவதை வாடிக்கையாக வைத்து விளையாடிய வந்த விராட் கோலி 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை சதம் அடிக்காமல் இருந்து வருகிறார். அதோடு மீண்டும் பார்முக்கு திரும்புவார், சிறப்பாக விளையாடுவார் என்று ஒவ்வொரு தொடரிலும் ரசிகர்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Virat Kohli

- Advertisement -

ஆனால் இதுவரை கோலி தனது சிறப்பான ஆட்டத்திற்கு திரும்பவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலாவது அவர் மீண்டும் தனது அதிரடியான ஆட்டத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி வெளியேறியதால் இம்முறை நிச்சயம் பெங்களூர் அணிக்காக அதிரடியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடர் முழுவதுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வரும் விராட் கோலி லக்னோ அணிக்கு எதிராக மும்பை டி ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்று வரும் 31-ஆவது லீக் போட்டியிலும் அவர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

kohli 1

அதிலும் குறிப்பாக இந்த கோல்டன் டக் அவுட் மூலம் அவர் ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 181 ரன்களை குவித்தாலும் விராட் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே சமீரா பந்தில் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது இரண்டாவது முறையாக ஐபிஎல் போட்டி ஒன்றில் கோல்டன் டச் ஆகி கோலி ஏமாற்றத்தை தந்துள்ளார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு நாதன் குல்டர் நைல் பந்துவீச்சில் அவர் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி ஆட்டமிழந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அவர்கிட்ட அப்படி என்ன டேலன்ட்ட பாத்துடீங்க? எனக்கு பெருசா தெரியல – இளம்வீரரை வம்பிழுத்த சஞ்சய் மஞ்சரேக்கர்

நடைபெற்று வரும் நடப்பு 15 ஆவது ஐ.பி.எல் தொடரில் டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு அணி சிறப்பாகவே விளையாடி வந்தாலும் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் பார்ம் மோசமாக உள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர் என்றே கூறலாம்.

Advertisement