அவர்கிட்ட அப்படி என்ன டேலன்ட்ட பாத்துடீங்க? எனக்கு பெருசா தெரியல – இளம்வீரரை வம்பிழுத்த சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்தியாக பூர்த்தி செய்து வரும் இந்த போட்டி நாளுக்கு நாள் சுவாரசியத்தை அதிகரித்து வருகிறது. மொத்தம் பத்து அணிகளுடன் இந்த தொடரானது நடைபெற்று வருவதால் இந்த தொடரில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

IPL 2022 (2)

- Advertisement -

அதன்படி தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இளம் வீரர்கள் கைப்பற்றி அதனை அருமையாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல இளம் வீரர்கள் கிரிக்கெட் உலகிற்கு தங்களது வருகையை அறிவித்து வருகின்றனர். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இடம் பிடித்தும் பெரிய அளவில் சாதிக்க ஒரு வீரர் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வெளிப்படையான தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த சில சீசன்களை விட தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். தற்போது சமபலம் கொண்ட பல திறமையான வீரர்கள் ராஜஸ்தான் அணியில் இருப்பதால் தற்போது அவர்களால் பெரிய அணிகளை கூட எளிதாக வீழ்த்த முடிகிறது.

parag 2

ஆனால் ராஜஸ்தான் அணியில் பின்வரிசையில் ரியான் பராக் ஏன் இடம்பிடித்துள்ளார் என்று எனக்கு தெரியவில்லை. ஏனெனில் கடந்த 2 ஐ.பி.எல் தொடரில் அவரது சராசரி 11 ரன்கள் மட்டும் தான். அதுமட்டுமின்றி அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 110 தான். இப்படி இருக்க அவரை ஏன் ராஜஸ்தான் அணி 3 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கியது என எனக்கு தெரியவில்லை. அதேபோன்று அவரிடம் என்ன இருக்கிறது?

- Advertisement -

அவரிடம் அப்படி என்ன ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பார்த்து விட்டது? என்றும் எனக்குத் தெரியவில்லை. என்னை பொறுத்தவரை அவர் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே கிடையாது. ஆனாலும் ராஜஸ்தான் அணி அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறது என்று வெளிப்படையாக அந்த வீரர் குறித்து பேசியுள்ளார். அதே போன்று தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : இந்திய அணியில் ரொம்ப சேட்டை பண்ற ஆளுங்கனா அது அவங்க 2 பேர்தான் – சூரியகுமார் யாதவ் வெளிப்படை

ரியான் பராக் பெரிய இன்னிங்ஸ் விளையாடவில்லை என்றாலும் தொடர்ந்து நம்பிக்கை அளித்து அவர்கள் வாய்ப்பு அளித்து வருகிறார்கள். அதே வேளையில் அவர் என்னதான் செய்யப்போகிறார் என்பதைக் காண நானும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement