இந்திய அணியில் ரொம்ப சேட்டை பண்ற ஆளுங்கனா அது அவங்க 2 பேர்தான் – சூரியகுமார் யாதவ் வெளிப்படை

Sky
- Advertisement -

இந்திய அணியின் மிடில் ஆர்டரில் தற்போது நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வரும் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் ரஞ்சி கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வந்தாலும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடம்பிடிக்க ஏகப்பட்ட போட்டி நிலவும் வேளையில் தனது தொடர்ச்சியான அசத்தலான ஆட்டம் காரணமாக நிராகரிக்க முடியாமல் அவர் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார்.

sky 2

- Advertisement -

இதுவரை 7 ஒருநாள் போட்டிகள் மற்றும் 14 டி2 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் போட்டியின் துவக்கத்தில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து அணி இழந்தால் கூட மிடில் ஆர்டரில் நங்கூரம் போல் நிலைத்து நின்று அதிரடி காட்டும் இவர் இனிவரும் காலங்களிலும் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பது உறுதி. இந்நிலையில் இந்திய அணியில் தான் தற்போது விளையாடியவரை தன்னால் மறக்க முடியாத சில நிகழ்வு குறித்து அவர் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில் : இந்திய அணியில் நான் கடந்த ஆண்டுதான் அறிமுகமாகி விளையாடி வருகிறேன். ஆனால் இன்றளவும் எனக்கு இந்திய அணிக்காக விளையாடுவதில் பெரிய மகிழ்ச்சி மற்றும் பெருமை ஆகியவை உள்ளது. இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் நான் ரசித்து விளையாடுகிறேன். போட்டிகள் ஒருபுறம் சீரியஸாக நடைபெற்றாலும் மறுபுறம் இந்திய அணிக்குள் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வருகிறேன்.

இந்திய அணியில் இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரது லூட்டியை தாங்கவே முடியாது. அந்த அளவிற்கு இருவரும் சேட்டை பிடித்தவர்கள். ஏனெனில் எனக்கு பிரட்டில் ஐஸ் க்ரீம் தடவி அதற்குள் சிக்கன் வைத்து தருவார்கள். அதை சாப்பிட்டால் தான் ரன் அடிக்க முடியும் என்று கூட என்னிடம் சொல்லி அதை சாப்பிட வைப்பார்கள். நானும் அவர்கள் சொல்வதை நம்பி சாப்பிட்டு விடுவேன். அந்த அளவிற்கு அவர்கள் கிண்டல் செய்யக் கூடியவர்கள்.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றால் அது இஷான் கிஷன் தான். ஏனெனில் எப்போதும் அவருடன் பயிற்சி செய்யும்போது மிக சுவாரஸ்யமாக இருக்கும். நாங்கள் பயிற்சியின்போது கிரிக்கெட்டைத் தவிர வேறு விடயம் பற்றி பேசிக் கொள்ள மாட்டோம். ஆனால் போட்டி முடிந்த பிறகு ஜாலியாக இருப்போம் என்று சூர்யகுமார் யாதவ் பேசினார். மேலும் விராட் கோலி குறித்து பேசிய அவர் : கடந்த ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியை என்னால் மறக்கவே முடியாது.

இதையும் படிங்க : கை மேல் கிடைத்த பலன். தினேஷ் கார்த்திக்கிற்கு அடித்த அதிர்ஷ்டம் – பி.சி.சி.ஐ சார்பில் வெளியான தகவல்

ஏனெனில் நான் இறுதிவரை அந்த ஆட்டத்தில் களத்தில் நின்று மும்பை அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தேன். அந்த சமயத்தில் கோலி என்னை நோக்கி ஒரு முறை வந்ததும் நான் மிகவும் பயந்துவிட்டேன். ஆனால் கோலி என்னிடம் வந்து எதையும் சொல்லாமல் பந்தை பார்த்துவிட்டு திரும்பி சென்றுவிட்டார். அப்போது எனக்கு மிகவும் படபடப்பாக இருந்தது எனவும் சூர்யகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement