கை மேல் கிடைத்த பலன். தினேஷ் கார்த்திக்கிற்கு அடித்த அதிர்ஷ்டம் – பி.சி.சி.ஐ சார்பில் வெளியான தகவல்

Karthik-1
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் பல்வேறு கேப்டன்களுக்கு கீழ் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய அவர் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய அவர் அதன் பிறகு இந்திய அணியில் இருந்து தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தார். ஆனாலும் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தனது இடம் முடிவுக்கு வந்துவிட்டாலும் டி20 போட்டிகளில் இன்னும் தனது இடம் முடியவில்லை என்று விளையாடி வருகிறார்.

karthik

- Advertisement -

நிச்சயம் இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்று வெற்றியைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே தனது இலக்கு என்று தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தனது ஆசையை தெரிவித்திருந்தார். அதோடு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிச்சயம் மீண்டும் இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் ஒருவராக இடம் பிடிப்பேன் என்று கூறியதோடு மட்டும் நிறுத்தாமல் தற்போது பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

கடந்த பல ஆண்டுகளாகவே சிறப்பாக விளையாடி வந்தாலும் தற்போது தான் மீண்டும் இந்திய அணியில் இணைய வேண்டும் என்பதனால் அசுரத்தனமான பேட்டிங்கின் மூலம் ரன் வேட்டை நிகழ்த்திவரும் அவர் இதுவரை 6 போட்டிகளில் 210 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 197 ரன்களை குவித்து தான் இன்னமும் ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்து வருகிறார்.

karthik

இதன் காரணமாக அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் வழங்க வேண்டும் என்று தற்போது ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவாக கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில் : தினேஷ் கார்த்திக் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் வெறும் 6 போட்டியை வைத்து எதையும் முடிவு செய்துவிட முடியாது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடர் முழுவதுமே அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தென் ஆப்ரிக்க தொடரில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் அவர் அற்புதமாக செயல்படும் பட்சத்தில் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : இதை மட்டும் பண்ணா போதும் உம்ரான் மாலிக் கண்டிப்பா இந்திய அணியில் இடம் பிடிப்பார் – சுனில் கவாஸ்கர் கருத்து

டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. அதற்கு முன்னதாக அவரது திறனை தற்போது உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நிச்சயம் அவர் தொடர்ச்சியாக இதே போன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவரை எங்களால் தவிர்க்கவே முடியாது என்ற நற்செய்தியை அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement