இதை மட்டும் பண்ணா போதும் உம்ரான் மாலிக் கண்டிப்பா இந்திய அணியில் இடம் பிடிப்பார் – சுனில் கவாஸ்கர் கருத்து

Umran
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கிய 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் ஒவ்வொரு போட்டியிலும் போட்டி போட்டிக் கொண்டு வெற்றிக்காக போராடுவதால் ஒவ்வொரு போட்டியும் மிகவும் சுவாரசியமாக அமைந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் பெரிய அணிகளாக பார்க்கப்படும் மும்பை மற்றும் சென்னை அணிகள் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் பின்தங்கி சரிவை சந்தித்துள்ளது.

PBKS vs SRH

- Advertisement -

அதேவேளையில் சாதாரண அணி என்று ஆரம்பத்தில் பார்க்கப்பட்ட சன்ரைசர்ஸ் அணியானது தாங்கள் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அதன்பிறகு சிறப்பாக மீண்டு வந்து கம்பேக் கொடுத்த அவர்கள் தற்போது தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

இதன் காரணமாக 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்கள் 4 போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நல்ல நிலையில் அந்த அணி உள்ளது. சன் ரைசர்ஸ் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் கை கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் அந்த அணிக்கு மிகவும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் 9 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகம் வரை எளிதாக பந்துவீசி அசத்தி வருகிறார். அவரது இந்த அசத்தலான வேகம் பல்வேறு வீரர்கள் இடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஜாம்பவான்களின் டேல் ஸ்டெய்ன் மற்றும் முரளிதரன் ஆகியோரும் அவரது இந்த பந்துவீச்சினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் அவரை புகழ்ந்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : உம்ரான் மாலிக் வெகுவிரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார். அதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. ஏனெனில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் பவுலர்கள் அதிகமாக வொயிடு வீசுவார்கள்.

இதையும் படிங்க : 360 டிகிரியில் விளையாடும் அவரை பாக்கும்போது எனக்கே மீண்டும் விளையாடனும்னு ஆசையா இருக்கு ! ஏபிடியை பூரிக்க வைத்த நட்சத்திர வீரர்

ஆனால் உம்ரான் மாலிக் அதிகமாக வொயிடு பந்துகளை வீசுவது கிடையாது. அதே போன்று இவ்வளவு வேகமாகப் பந்து வீசும் அவர் லெக் சைடில் வொயிடு செல்லும் பந்துகளை மட்டும் கட்டுப்படுத்தினால் நிச்சயம் மிகப் பெரிய பந்து வீச்சாளராக வருவது மட்டுமின்றி இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம் பிடிப்பார் என கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement