என்னை பொறுத்தவரை ரோஹித் மும்பை கேப்டன்சியை அவரிடம் குடுத்திடலாம் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற தனது முதல் 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து ஒரு வெற்றிகளைக் கூட பெற முடியாமல் புள்ளிப் பட்டியலில் அடி பாகத்தில் திண்டாடுகிறது. இத்தனைக்கும் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்றுள்ள அந்த அணி ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ளது. அந்த அணியைப் போலவே நடப்புச் சாம்பியன் என்ற பெயருடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தனது முதல் 4 போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது.

MI vs KKR Pat CUmmins Venkatesh Iyer

அந்த அணிக்கு கூட 2008 – 2021 வரை கேப்டனாக செயல்பட்டு 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான கேப்டன் என சாதனை படைத்த எம்எஸ் தோனி திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகியது பின்னடைவை ஏற்படுத்தி தோல்விக்கான ஒரு காரணமாக அமைந்தது என்று கூறலாம். ஏனெனில் அவருக்கு அடுத்தபடியாக கேப்டனாக அணியை வழிநடத்தி வரும் ரவீந்திர ஜடேஜா இதற்கு முன் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாதவர்.

- Advertisement -

தடுமாறும் ரோஹித்:
மறுபுறம் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என பெயர் எடுத்த ரோகித் சர்மா தான் இந்த வருடமும் மும்பைக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அப்படி இருந்தும் கூட அவரால் இதுவரை ஒரு வெற்றியைக் கூட அந்த அணிக்கு பெற்றுத்தர முடியவில்லை. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என எதுவுமே இந்த வருடம் சரியாக அமையாத நிலையில் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

MI V DC IPL 2022

அதேசமயம் அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜா கூட நேற்றைய பெங்களூருக்கு எதிரான தனது 5-வது போட்டியில் வெற்றியை பதிவு செய்ததால் 10-வது இடத்தில் இருந்த சென்னை 2 புள்ளிகளுடன் மும்பையை பின்னுக்கு தள்ளி 9-வது இடத்துக்கு முன்னேறியது. எனவே அதேபோல் இன்று ஏப்ரல் 13-ஆம் தேதி பஞ்சாப்க்கு எதிராக மும்பை களமிறங்கும் தனது 5-வது போட்டியில் கண்டிப்பாக வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ரோகித் சர்மா தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

கேப்டன்ஷிப்ப விட்ருங்க:
இப்படி கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தவிக்கும் ரோகித் சர்மா பேட்டிங்கில் ரன்கள் அடிக்க முடியாமலும் தவித்து வருவது மும்பையின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்தடுத்த தோல்விகளால் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறி வரும் வரும் ரோகித் சர்மா பேசாமல் கேப்டன் பொறுப்பை விட்டுவிடலாம் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Pollard

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னை கேட்டால் பொல்லார்ட் சிறப்பாக செயல்பட முடியும். சொல்லப்போனால் இந்த வருடம் ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பாக விராட் கோலியை போல கேப்டன் பதவியை விட்டு விட்டு சற்று ரிலாக்ஸாக ஒரு முழு பேட்ஸ்மேனாக அவர் (ரோஹித்) விளையாடுவார் என எதிர்பார்த்தேன். ஏனெனில் பொல்லார்ட் ஒரு சிறந்த சர்வதேச கேப்டன்”

- Advertisement -

“அவரின் புள்ளிவிவரங்கள் கடந்த 3 – 4 சீசன்களாக மோசமாக உள்ளது. 30 ரன்களுக்கும் கீழ் பேட்டிங் சராசரி கொண்டுள்ள அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 150 க்கும் கீழே குறைந்து விட்டது. அவர் கடந்த வருடங்களில் பஞ்சாப் அணிக்காக கேஎல் ராகுல் போன்றவர்கள் எப்படி நிலைத்து நின்று ஆட முயற்சித்தார்களோ அதேபோல் விளையாட முயற்சிக்கிறார். எனவே சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தால் மட்டுமே இந்திய அணியில் அவர் எப்படி சிறப்பாக விளையாடினாரோ அதே ரோகித் சர்மாவை ஐபிஎல் தொடரில் பார்க்க முடியும்” என கூறினார்.

Rohit

அவர் கூறுவது போல கடந்த பல வருடங்களாக பெங்களூருவுக்கு முதல் கோப்பையை வாங்க வேண்டுமென்ற லட்சியத்தில் போராடி தோல்வி அடைந்த விராட் கோலி கடந்த வருடம் கேப்டன் பதவியில் இருந்து விலகி தற்போது சுதந்திர பறவையாக எந்தவித அழுத்தமும் இல்லாமல் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட தொடங்கியுள்ளார். அவரே அப்படி என்றால் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்றுள்ள ரோஹித் சர்மா இனி ஐபிஎல் தொடரில் தனது கேப்டன்சிப் பற்றி நிரூபிக்க எதுவும் இல்லை என்ற நிலையில் தாராளமாக பொல்லார்ட் போன்ற ஒரு கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்தவர்களிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு சுதந்திரமாக விளையாட முயற்சிக்கலாம் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் கடந்த 3 – 4 வருடங்களாக அவரின் பேடிலிருந்து ரன்கள் வரவில்லை என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறுவது போல 4 கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி கூட கடந்த 2 வருடங்களாக ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வந்த நிலையில் சிஎஸ்கே கேப்டன்சிப் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைத்த முதல் போட்டியிலேயே அதிரடியாக 50* (38) ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பினார்.

இதையும் படிங்க : கேப்டன் பொறுப்பில் மூழ்கி ரோஹித் சர்மா இந்த விஷயத்தை மறந்துட்டாரு – ரோஹித்தை விளாசிய சேவாக்

எனவே விராட் கோலி, எம்எஸ் தோனி போன்றவர்களின் வழியில் ரோகித் சர்மா செயல்பட்டால் மட்டுமே அவரால் பழைய பார்முக்கு திரும்ப முடியும் என்று மஞ்சரேக்கர் கூறியுள்ளார்.

Advertisement