- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த தோல்வி இந்தியாவுக்கு ஒரு மேட்டரே இல்ல.. கத்துகிட்டு அங்க போய் ஜெய்ப்பதே முக்கியம்.. மஞ்ரேக்கர் ஆதரவு

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் முதலாவதாக நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் முறையாக இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளார்கள்.

இந்நிலையில் இது போன்ற சாதாரண இருதரப்பு தொடர்களில் இந்தியா முதல் முறையாக தோற்றது பிரச்சனையில்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது போன்ற தொடர்களில் பாடங்களைக் கற்றுக்கொண்டு உலகக்கோப்பை வெல்வதே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா தோற்றது பெரிய விஷயமல்ல”

- Advertisement -

இதெல்லாம் மேட்டரே இல்ல:

“நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் இன்றைய ஒருநாள் கிரிக்கெட்டில் உலககோப்பை மட்டுமே முக்கியம். சாம்பியன்ஸ் டிராபி கூட அவ்வளவு முக்கியமல்ல. ஏனெனில் கடைசியாக 3 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற அணிகளை நினைவுபடுத்த முயற்சித்தால் நீங்கள் தடுமாறுவீர்கள். அதுவே உலகக்கோப்பை என்றால் 1975 முதல் வெற்றி பெற்ற அணிகளை நினைவில் வைத்திருப்பீர்கள்”

“ஆம் இது போன்ற தோல்விகள் உங்களுக்கு பின்னடைவைக் கொடுக்கலாம். இருப்பினும் நீங்கள் ஏற்கனவே 2027 உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்று விட்டீர்கள். எனவே இது போன்ற சாதாரண இருதரப்பு தொடர்களை நான் வெறும் பயிற்சி ஆட்டங்கள் என்று சொல்வேன். அதை நீங்கள் பெரிதாக படிக்கக்கூடாது. ஏனெனில் இது போன்ற இருதரப்பு தொடர்களின் முடிவுகளை 2 வாரங்கள் கழித்து எந்த ரசிகரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்”

- Advertisement -

உலகக்கோப்பையே முக்கியம்:

“இந்த இருதரப்பு தொடர்கள் அனைத்தும் உலகக் கோப்பைக்கு ஃபார்முடன் வருவதற்கான வழிகாட்டிகளாகும். இதை வைத்து யார் உலகக்கோப்பையை வெல்வார் என்று உங்களால் சொல்ல முடியாது. உலகக் கோப்பையில் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி அமையும். எனவே இந்த இருதரப்பு தொடர்களில் மகிழ்ச்சியுடன் விளையாடி உங்களுடைய அணி எப்படி இருக்கும் என்பதற்கான ஐடியாவை பெறுங்கள். இங்கே வெளிப்படுத்திய செயல்பாடுகளை அதிகம் படிக்காதீர்கள்”

இதையும் படிங்க: அவரை வெச்சு டி20 தொடரிலும் இந்தியாவை வீழ்த்தி.. 2026 உ.கோப்பைக்கு ரெடியாவோம்.. சான்ட்னர் பேட்டி

“50 வருடங்களாக கிரிக்கெட்டை பின்பற்றும் எனக்கு உலகக் கோப்பை மட்டுமே முக்கியமாக தெரிகின்றது. இதை ஒரு இந்திய அணியின் ரசிகன், முன்னாள் வீரராகச் சொல்கிறேன். உலகக் கோப்பையில் கூட தகுதி சுற்றுகள் பெரிதாக இருக்காது. லீக், செமி ஃபைனல், ஃபைனல் முக்கியமாக இருக்கும். மொத்தத்தில் 50 ஓவர் போட்டிகள் என்பது எனக்கு உலகக்கோப்பை பற்றியது. அதனால் இந்த இருதரப்பு தொடரில் சந்தித்து தோல்வியை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் அல்லவா?” என்று கூறினார்.

- Advertisement -