அவரை வெச்சு டி20 தொடரிலும் இந்தியாவை வீழ்த்தி.. 2026 உ.கோப்பைக்கு ரெடியாவோம்.. சான்ட்னர் பேட்டி

Mitchell Santner
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் முதலாவதாக நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. விரைவில் துவங்கும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரை வெல்ல இரு அணிகளும் தயாராகியுள்ளன.

குறிப்பாக ஒருநாள் தொடரில் வரலாறு காணாத தோல்வியை பரிசளித்த நியூசிலாந்தை டி20 தொடரில் தோற்கடித்து இந்தியா பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் தங்கள் அணியை சேர்ந்த டார்ல் மிட்சேல் கடினமான பயிற்சிகளை எடுத்து சுழல் பந்துகளை எதிர்கொள்வதில் முன்னேறியுள்ளதாக நியூசிலாந்து கேப்டன் மிட்சேல் சான்ட்னர் தெரிவித்துள்ளார். அதனால் ஒருநாள் தொடரில் 2 சதங்கள் அடித்த அவர் இந்தியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றியதாகவும் சான்ட்னர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

டி20 தொடரிலும்:

எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை வைத்து இந்தியாவை டி20 தொடரிலும் தோற்கடித்து உலகக் கோப்பைக்கு நியூசிலாந்து தயாராகும் என்று சான்ட்னர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆரம்பத்தில் மிட்சேல் சுழலுக்கு எதிராக தடுமாறினார். ஆனால் அதற்காக கடினமாக உழைத்த அவர் தற்போது அதற்கானப் பழங்களைப் பறிக்கும் வேலையாளாக மாறியுள்ளார்”

“தற்போது சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் அவர் ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்களில் ஆட்டத்தை அழகாக கட்டுப்படுத்துகிறார். அதையே அவர் டி20 தொடரிலும் செய்வார் என்று நம்புகிறேன். சமீப காலங்களில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் பெற்ற வெற்றிகள் இத்தொடரில் எங்களுக்கு வெற்றிக்கான விளிம்பைக் கொடுக்கிறது. நாங்கள் இந்தியாவில் விளையாடுவதை விரும்புகிறோம்”

- Advertisement -

இந்தியாவை வீழ்த்துவோம்:

“சமீப காலங்களில் இந்தியாவுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் நாங்கள் வெவ்வேறு ஃபார்மட்டில் வெற்றிகளைப் பெற்றுள்ளோம். அதே போல நாங்கள் இத்தொடரையும் எதிர்நோக்குகிறோம். இத்தொடரை வெல்வது எங்களுடைய இலக்காகும். அதே சமயம் டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதும் முக்கிய இலக்காகும். உலகக்கோப்பையில் நாங்கள் எதிர்கொள்ளப் போகும் சூழ்நிலைகளில் இந்தியா போன்ற சிறந்த அணியுடன் இப்போதே விளையாடுவது நல்லது”

இதையும் படிங்க: ரோஹித் மற்றும் விராட் ஆகியோருக்கு அடுத்து 3 ஆவது இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் – நிகழ்த்தவுள்ள சாதனை

“இது சிறந்த தொடராக இருக்கும். நாங்கள் உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாடுவதையும் விரும்புகிறோம். எங்களைப் பொறுத்த வரை இந்திய சூழ்நிலைகளில் டி20 உலகக் கோப்பையில் இந்தியா போன்ற அணிகளை எதிர்கொள்வோம். அதற்கு தயாராக இத்தொடர் உதவிகரமாக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து டி20 தொடர் ஜனவரி 21ஆம் தேதி நாக்பூரில் துவங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement