ஜடேஜாவிற்கு சரியான மாற்று வீரர் இவர்தான். இளம் வீரருக்கு குவியும் வாழ்த்துக்கள் – சஞ்சய் மஞ்சரேக்கர் ஆதரவு

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று இரண்டே நாட்களில் முடிவுற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

cup

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் மட்டும் 53 ரன்கள் குவிக்க மற்ற வீரர்களில் ஒருவர் கூட 20 ரன்கள் வரை குவிக்கவில்லை. அந்த அளவிற்கு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் மிகச் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

22 ஓவர்கள் வீசி அவர் 6 மெய்டன் வீசியது மட்டுமின்றி 38 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். எந்த ஒரு வீரரையும் ரன் அடிக்க விடாமல் சரியான வேகம் மற்றும் லென்த்தில் பந்துவீசி இங்கிலாந்து அணியை சுருட்டினார். இந்நிலையில் இவருக்கு தற்போது சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சச்சின் டெண்டுல்கர் சுரேஷ் ரெய்னா போன்ற முன்னாள் வீரர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

axar1

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன வர்ணனையாளர் மற்றும் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்தக் கருத்தில் : துல்லியமாக பந்துவீசுவதில் வல்லவராக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு கிடைத்த முக்கியமான வீரர் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய தொடரின் போது ரவீந்திர ஜடேஜா விற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இணைந்து இருக்கும் அக்சர் பட்டேல் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் 2வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணிக்காக அறிமுகமாகி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து தற்போது இந்த டெஸ்ட் போட்டியிலும் 6 விக்கெட்களை வீழ்த்தி அனைவரின் பாராட்டையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement