ஆஸ்திரேலியாவில் ஒரே செஞ்சுரி. மத்தபடி என்ன பண்ணிட்டாரு ? – இந்திய வீரரின் தவறை சுட்டிக்காட்டிய மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட்போட்டியில் இந்தியா மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே 1 மற்றும் 0 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரஹானேவின் கேப்டன்ஸிக்கு கீழ் சிறப்பாக ஆடிய டீம் இது தானா ! மெல்போர்னில் சதமடித்த பின்பு தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை அவர் அளிக்க தவறியுள்ளதாக முன்னாள் வீரர் சஞ்ச் மஞ்ச்ரேகர் சுட்டிக் காட்டியுள்ளார்.

anderson 1

- Advertisement -

இந்திய அணியின் தோல்வியை தாண்டி அவரது இந்த ரன்கள் மிகப்பெரிய கேள்வியை தற்பொழுது எழுப்பியுள்ளது. முதல் இன்னிங்சில் ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில் துணை கேப்டன் ரஹானே சொதப்பினார். இரண்டாவது இன்னிங்சிலாவது அவர் ஸ்கோர் செய்வார் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டக் அவுட் ஆகி மிகப்பெரிய அதிர்ச்சி அளித்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சதமடித்த பின்பு அவர் ஆடிய எந்த ஒரு இன்னிங்ஸிலும் சிறப்பான ரன் குவிப்பு எதுவுமே இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

Rahane-3

ஒரு கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக தொடர்ந்து 27, 22, 4, 37, 24, 1 மற்றும் 0 ரன்களை மட்டும கடந்த சில போட்டிகளில் எடுத்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 100 ரன்களை எடுத்த பின்பு தனது சிறப்பான ஆட்டங்களை தரவே மற்ற வீரர்கள் செயல்படுவார்கள் என்றும் ஆனால் ரஹானே அவ்வாறு செய்ய தவறுகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Rahane

ஆனாலும் இந்த தோல்விக்கு பின்பு பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கோலி கூறுகையில் : இந்திய அணியில் ரஹானே இடம் எப்போதும் முக்கியமான ஒன்று. அதனால் அவரது ஆட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement