இம்முறை ஐ.பி.எல் மினி ஏலத்தில் இவர்தான் அதிகத்தொகைக்கு ஏலம் போவார் – சஞ்சய் மஞ்சரேக்கர் கணிப்பு

Sanjay
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடருக்கான வேலைகள் தற்போதே விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி எதிர்வரும் இந்த 2023-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்கும் வீரர்கள் மற்ற அணிகளுக்காக ஒப்பந்தம் ஆவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Auction

- Advertisement -

அந்த வகையில் இந்த மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்துள்ளதால் தேவைப்பட்ட வீரர்களை மட்டுமே இந்த மினி ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பல அணிகளும் தங்களுக்கு தேவையான முன்னணி வீரர்களை வாங்க காத்திருக்கிறது.

இவ்வேளையில் இந்த மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் ஆகப்போகும் வீரர்கள் யார் என்பது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியை சேர்ந்த முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று தெரிவித்துள்ளார்.

Ben Stokes

இது குறித்து அவர் கூறுகையில் : நேரடியாகவே சொல்கிறேன் இந்த மினி ஏலத்தில் அதிகப்படியான தொகைக்கு பென் ஸ்டோக்ஸ் அதிக தொகைக்கு ஏலம் போவார். ஏனெனில் அவர் ஒரு மிகச்சிறந்த மேட்ச் வின்னர். அதுமட்டும் இன்றி பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அவரால் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும்.

- Advertisement -

அதன் காரணமாகவே அவர் பெரிய தொகைக்கு ஏலம் போவார். அது மட்டுமின்றி டி20 உலக கோப்பை தொடரிலும் இறுதிப்போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஆட்டநாயகன் விருந்தினையும் வென்றுள்ளதால் அவரை ஏலத்தில் எடுக்க மற்ற அணிகளிடம் கடுமையான போட்டி நிலவும்.

இதையும் படிங்க : சிக்ஸ் அடிக்க பவர் மட்டும் இருந்தா போதாது. இதுவும் கொஞ்சம் தேவை – சுப்மன் கில் ஓபன்டாக்

அதோடு சாம் கரனும் இம்முறை அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்திய மைதானங்களின் சூழ்நிலையை புரிந்து செயல்படக்கூடிய அனைத்து திறமைகளும் அவரிடம் உள்ளது எனவே அவரை சி.எஸ்.கே அணி ஏலத்தில் எடுக்க மும்முரம் காட்டும் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement