சிக்ஸ் அடிக்க பவர் மட்டும் இருந்தா போதாது. இதுவும் கொஞ்சம் தேவை – சுப்மன் கில் ஓபன்டாக்

Shubman-Gill
Advertisement

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியானது தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த சுற்று பயணத்தின் முதலாவது டி20 போட்டியானது நேற்று வெலிங்க்டன் மைதானத்தில் நடைபெற இருந்த வேளையில் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் பல இளம் இந்திய வீரர்களுக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

INDvsNZ

அந்த வகையில் ஏற்கனவே இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் இடம்பிடித்து விளையாடி வரும் சுப்மன் கில்லிற்க்கு இம்முறை டி20 தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தொடரில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் தொடர்ச்சியாக டி20 போட்டிகளிலும் விளையாடுவார் என்பது உறுதி.

- Advertisement -

இவ்வேளையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கு தான் நான் அறிமுகமானேன். அதுமட்டும் இன்றி அண்டர் 19 கிரிக்கெட்டிலும் நான் நியூசிலாந்தில் தான் அறிமுகமாகி விளையாடியுள்ளேன்.

Shubman Gill

எனவே இங்கு வந்து கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. நியூசிலாந்திற்கு மீண்டும் வருவதில் எனக்கு இனிமையான நினைவுகள் பல உள்ளன. எப்போதெல்லாம் நியூசிலாந்தில் விளையாடுகிறேன் என்று தெரியுமோ அப்போதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும். நான் பயிற்சி செய்த சில விஷயங்களை செயல்படுத்த இது போன்ற தொடர் முக்கியமான ஒன்று.

- Advertisement -

சிக்ஸர் விளாசுவது என்பது பவரால் மட்டுமே கிடையாது. அது டைமிங் ஷாட்டாலும் சாத்தியம் என்று நினைப்பவன் நான். சரியான டைமிங்கில் விளையாடினால் சிக்ஸரையும் எளிதாக விளாச முடியும் என்று நினைக்கிறேன். அதே போல பவுண்டரி, சிக்சரை அடிப்பதோடு சேர்த்து ஓடியெடுக்கும் ரன்களைத் தான் நான் அதிக அளவு எதிர்பார்ப்பேன்.

இதையும் படிங்க : சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை கூண்டோடு நீக்கிய பிசிசிஐ – 5 காரணங்களும் புதிய குழுவுக்கான ஸ்ட்ரிக் ரூல்ஸ் இதோ

டாட் பால் இல்லாமல் விளையாட வேண்டும் என்று அதிகம் நினைப்பதனால் அதிகமாக சிங்கிள் மற்றும் டபுள்ஸ் எடுத்து விளையாட விரும்புகிறேன். அதிகமான பவுண்டரிகளை விட அதிகமாக ரன்களை ஓடி எடுப்பதும் எனக்கு பிடிக்கும் என சுப்மன் கில் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement