இலங்கை அணிக்கெதிரான தொடருக்கான இந்திய பிளேயிங் லெவனை தேர்வு செய்த – சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

ஜூன் மாதம் இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய டெஸ்ட் அணிக்கு, அங்கு செப்டம்பர் மாதம் வரை கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால், இடையில் இருக்கும் ஜூலை மாதத்தில் இந்திய இளம் வீரர்கள் அடங்கிய மற்றொரு இந்திய அணியை கொண்டு இலங்கைக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது பிசிசிஐ. இந்த இரண்டு தொடரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கும் இந்திய வீரர்களின் பட்டியலை இதுவரை பிசிசிஐ வெளியிடவில்லை. எனவே இலங்கை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இலங்கை தொடருக்கான தன்னுடைய இந்திய அணியை தெரிவித்திருக்கிறார். தன்னுடைய ப்ளேயிங் லெவனைப்பற்றி பேசிய அவர், கொரானா காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகிய இருவரையும் ஓப்பனர்களாக தேர்வு செய்கிறேன். இந்த இருவரும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக திழந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஷிகர் தவான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர்களான இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் களமிறங்கினால் மிக நன்றாக இருக்கும் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஐந்தாவது இடத்தை மனிஷ் பாண்டேவிற்கு ஒதுக்கியிருக்கிறார். மேலும் பேசிய அவர்,ஹர்திக் பாண்டியாவால் பந்து வீச முடியாது என்றாலும் அவருடைய பேட்டிங் மட்டும் பீல்டிங் திறமையின் காரணமாக அவரை ஆறாவது இடத்திற்கு தேர்வு செய்கிறேன். ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்தது தவறில்லை என நான் கருதுகிறேன். ஹர்திக் பாண்டியாவால் பந்து வீச முடியாததால், ஆல்ரவுண்டருக்கான இடத்தை ராகுல் திவேட்டியாவிற்கு வழங்குகிறேன் என்று கூறிய அவர்,

sakariya 2

வேகப் பந்து வீச்சாளர்கள் பட்டியிலில் சேத்தன் சக்காரியா, தீபக் சஹார் மற்றும் புவேனேஷ் குமார் ஆகியோரையும் தேர்வு செய்திருப்பதாக அறிவித்தார். மேலும் தனது அணியின் மெயின் ஸ்பின்னராக ராகுல் சஹார் தான் இருக்க வேண்டும் என்று எண்ணி ஸ்பின்னருக்கான இடத்தை அவருக்கு அளிக்கிறேன் என்று கூறிய அவர், பந்து வீச்சு துறையை பொறுத்தவரை, அவர்களை புவனேஷ் குமார் தான் வழிநடத்த தகுதியடையவர் என்பதால், அந்த பொறுப்பை புவனேஷ் குமாரிடம் ஒப்படைக்கிறேன் என்று அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்த இந்திய அணி:

01. ஷிகர் தவான் 02. ப்ரித்வி ஷா 03. இஷான் கிஷான் 04. சூர்யகுமார் யாதவ் 05. மனிஷ் பாண்டே 06. ஹர்திக் பாண்டியா 07. ராகுல் திவேட்டியா 08. சேத்தன் சக்காரியா 09. புவனேஷ் குமார் 10. தீபக் சஹார் 11. ராகுல் சஹார்.

Advertisement