இந்த இலங்கை தொடரில் அசத்தப்போவது இவங்க 3 பேர் தான். எழுதி வச்சிக்கோங்க – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 13-ஆம் தேதி அன்று துவங்க இருக்கிறது. ஜூலை 25 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்க இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்கு பயணித்துள்ளது. அதில் அறிமுக வீரர்களாக வாய்ப்பை பெற்ற சேத்தன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி, தேவ்தத் படிக்கல், கெய்க்வாட் போன்ற வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Dravid

- Advertisement -

முன்னணி வீரர்கள் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் தற்போது இந்த இளம் அணி எப்படி இலங்கை அணியை எதிர்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி கேப்டனாக தவானும், பயிற்சியாளராக டிராவிடும் செயல்பட இருப்பதால் இந்த தொடரில் இந்திய அணியின் ஆட்டம் எவ்வாறு அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடரில் சிறப்பாக செயல்படக்கூடிய 3 வீரர்கள் குறித்தும் தனது கருத்தினை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

sky 1

எனது முதல் தேர்வு சூர்யகுமார் யாதவ் தான். கடந்த சில வருடங்களாகவே அணியில் இடத்துக்காக போராடி வந்த சூர்யகுமார் யாதவ் ஒருவழியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இருக்கும் பிரச்சனையை போக்க அவர் சரியாக இருப்பார் என்றே நான் கருதுகிறேன். இந்த இலங்கை தொடரில் அவர் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் சரி, நான்காவது இடத்தில் இருந்தாலும் சரி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரது வேலையை கச்சிதமாக செய்வார் என்று குறிப்பிட்டிருந்தார்.

Varun

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : இரண்டாவதாக சக்காரியா மற்றும் மூன்றாவதாக வருண் சக்கரவர்த்தி ஆகியோரது ஆட்டத்தையும் இந்த தொடரில் பார்க்க ஆவலாக உள்ளேன். ஏனெனில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இவர்கள் இருவரும் இம்முறை சிறப்பாக விளையாடி அதன் மூலம் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார். சக்காரியா மற்றும் சக்கரவர்த்தி ஆகியோர் இப்போதுதான் இந்திய அணியின் அறிமுக வாய்ப்பினைப் பெற்று இருக்கின்றனர் என்பதும் நிச்சயம் அவர்கள் டி20 அணியில் இடம் பிடிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement