- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதுல கூட உங்களால அடிக்க முடியலன்னா ஏதோ பிரச்சனை இருக்கு.. ரோஹித் பற்றி மஞ்ரேக்கர் கவலை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சுமாரான ஃபார்மில் இருக்கிறார். கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் சுமாராக விளையாடிய அவர் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் ரஞ்சிக் கோப்பையில் 10 வருடங்கள் கழித்து விளையாடிய போதிலும் அரை சதம் கூட அடிக்கவில்லை.

அந்த நிலையில் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தயாராகும் நோக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடுகிறது. எனவே கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் அந்த ஒருநாள் தொடரில் ரோஹித் அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே 2 (7) ரன்களில் அவுட்டான அவர் ஏமாற்றத்தையே கொடுத்தார்.

- Advertisement -

ஒன்டேவிலும் திணறல்:

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறும் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டிலும் திணறுவது தமக்கு கவலையைக் கொடுப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் மெதுவாகவும் அல்லாமல் அதிரடியாகவும் அல்லாமல் விளையாடி ஃபார்மை கண்டறியும் வாய்ப்பை ஒருநாள் போட்டிகள் மட்டுமே கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதில் கூட தடுமாறுவதால் ரோஹித்தின் பேட்டிங்கில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றி மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “ஆம் ரோஹித் சர்மா அவுட்டான விதத்தில் ஏமாற்றத்தைச் சந்தித்திருப்பார். தெளிவாக அவரிடம் அழுத்தம் காணப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டிலும் சுமாராக விளையாடி பெரிய ரன்கள் குவிக்க ரோஹித் தடுமாறுகிறார் என்றால் அவரிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம்”

- Advertisement -

மஞ்ரேக்கர் கவலை:

“ஏனெனில் நீங்கள் டாப் 3 இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேனாக இருந்தால் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவதற்கு ஒருநாள் போட்டிகளே மிகவும் சிறந்த ஃபார்மில் என்று நான் எப்போதும் கருதுகிறேன். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபியில் ரோஹித் சர்மாவின் சிறந்த செயல்பாடுகளை நம்மால் பார்க்க முடியவில்லை என்றால் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: பண்ட் பெஞ்சிலேயே இருக்கட்டும்.. இந்தியாவுக்கு அவர் நல்ல ஃலெப்ட் ஹேண்ட் கிடைச்சுட்டாரு.. மஞ்ரேக்கர் பேட்டி

இதைத் தொடர்ந்து இந்தத் தொடரின் 2வது போட்டியின் ஞாயிற்றுக்கிழமை கட்டாக் நகரில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் வென்று 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது. அந்தப் போட்டியின் ரோஹித் சர்மா குறைந்த பட்சம் அரை சதமாவது அடித்து ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

- Advertisement -