- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த 4 லெஜெண்ட்ஸ் இல்லாமையே ஜெய்ச்ச இந்தியாவுக்காக.. பும்ரா தான் இதை அட்ஜஸ்ட் பண்ணனும்.. மஞ்ரேக்கர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்தது. அதற்கு பந்து வீச்சுத் துறையில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா பணிச்சுமை காரணமாக 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆனால் அந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெறவில்லை.

அதனால் பணிச்சுமை விஷயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்நிலையில் இந்திய அணி யாரையும் சார்ந்திருக்கவில்லை என்பது இங்கிலாந்து தொடரில் நிரூபணமாகியுள்ளதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஏனெனில் ரோஹித், விராட், பும்ரா, ஷமி போன்ற 4 நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் இல்லாமலேயே இளம் இந்திய அணி இங்கிலாந்தை தொடரை சமன் செய்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இந்தியா அட்ஜஸ்ட் செய்யாது:

எனவே இந்தியாவுக்காக விளையாட வேண்டுமெனில் ஜஸ்ப்ரித் பும்ரா தான் ஏதேனும் வழியில் தம்மை மாற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். மாறாக பும்ராவுக்காக இந்தியா அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து தொடர் பெரிய வீரர்கள் மீது தைரியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான தைரியத்தைக் கொடுத்திருக்கும்”

“இந்தத் தொடர் நட்சத்திர வீரர்களுக்கும் நமக்கும் பெரிய பாடமாகும். ஏனெனில் விராட், ரோஹித், புஜாரா, ஷமி ஆகியோர் மட்டுமின்றி பும்ராவும் இல்லாமல் இங்கிலாந்தில் நாம் 2 மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இது நமக்கு விளையாட்டில் தவிர்க்க முடியாத பெரியவர் யாரும் கிடையாது என்பதை நினைவூட்டுகிறது. இந்தியா இப்படித்தான் பும்ராவை கையாள வேண்டும்”

- Advertisement -

பும்ரா தான் அட்ஜஸ்ட் பண்ணனும்:

“ஒருவேளை ஜஸ்ப்ரித் பும்ரா 2 தொடர்ச்சியான போட்டிகளில் விளையாட முடியாவிட்டால் அவர் உங்களுடைய முதன்மை பவுலராக இருக்க முடியாது. அதிகப்படியான திறன் உள்ள வீரர்களை விட நல்ல ஃபிட்டாக சிறப்பாக விளையாடும் பசியுடன் காத்திருக்கும் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பும்ராவை பொறுத்த வரை நானும் அவருடைய ரசிகன். ஒருவேளை அவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பங்காற்ற விரும்பினால் நிலைத்திருப்பது இன்றியமையாதது”

இதையும் படிங்க: 2012இல் லக்ஷ்மன் என் பேச்சை கேட்ருந்தா.. இந்நேரம் பாண்டியா ஹைதராபாத் டீம்ல இருப்பாரு.. பதான் பேட்டி

“அனைத்தையும் விட ஒரு உண்மையான சிறந்த விளையாட்டு வீரரால் 100% ஃபிட்டாக இல்லையென்றாலும் சிறப்பாக செயல்பட முடியும். எனவே இந்திய கிரிக்கெட் பும்ராவுக்காக தன்னை அட்ஜஸ்ட் செய்யக்கூடாது. இந்தியாவுக்காக பும்ரா தன்னை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அதற்காக சில கடினமான முடிவுகள் அல்லது ஃபிட்னஸில் கடினமாக உழைப்பது போன்றவற்றை அவர் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -