- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கெளதம் கம்பீர் இதுக்கு தகுதியானவர் இல்ல.. இனியாச்சும் அவங்கள அனுப்புங்க.. பிசிசிஐக்கு மஞ்ரேக்கர் அட்வைஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு செல்ல அந்த தொடரில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்தத் தொடரில் பங்கேற்பதற்கு ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் வழக்கம் போல சில அதிரடியான கருத்துக்களை சொன்னார். குறிப்பாக விராட் கோலி கடந்த ஐந்து வருடங்களில் இரண்டு டெஸ்ட் சாதங்கள் மட்டுமே அடித்து சுமாராக விளையாடுவதாக முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

காரமான கம்பீர்:

அது ஒரு சிறந்த வீரருக்கு சரியான ஆட்டம் கிடையாது என்றும் பாண்டிங் கூறியிருந்தார். எனவே ஆஸ்திரேலியாவில் விராட் கோலி அசத்த வேண்டுமென்று அவர் தெரிவித்திருந்தார். அது பற்றி கௌதம் கம்பீரிடம் கேட்கப்பட்டது. அப்போது இந்திய அணியை பற்றி பேசுவதற்கு ரிக்கி பாண்டிங் யார்? அவரை ஆஸ்திரேலியாவை பற்றி சிந்திக்க சொல்லுங்கள் என்று கம்பீர் அதிரடியான பதிலை கொடுத்தார்.

மேலும் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஆஸ்திரேலியாவில் அசத்துவார்கள் என்றும் அவர் கூறினார். அது போக நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியால் ரசிகர்கள் கிண்டலை பற்றி தாம் கவலைப்படவில்லை என்றும் கம்பீர் தெரிவித்தார். அவருடைய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

- Advertisement -

மஞ்ரேக்கர் கோரிக்கை:

இந்நிலையில் கௌதம் கம்பீர் பொதுவெளியில் எப்படி வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும் என்பதை சரியாக அறியாதவர் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். அதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்க கம்பீர் தகுதியற்றவர் என்றும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: 10 நாள்.. ஆஸ்திரேலியா அதை எப்படி கொடுத்தாலும் சரி.. இந்தியா இதை செஞ்சு ஜெயிக்கும்.. கம்பீர் உறுதி

“கௌதம் கம்பீரின் செய்தியாளர்கள் சந்திப்பை இப்போது தான் பார்த்தேன். இது போன்ற வேலையில் இருந்து அவரை தொலைவில் வைக்குமாறு நான் பிசிசிஐயை கேட்டுக்கொள்கிறேன். அவரை அணியின் பின்னிருந்து வேலை செய்ய விடுங்கள். செய்தியாளர்களிடம் பழகும் போது அவரிடம் சரியான நடத்தையோ வார்த்தைகளோ இல்லை. அதனால் ஊடகங்களுக்கு முன்பாக செல்வதில் ரோகித் சர்மா அல்லது அகர்கர் சிறந்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -