ஜடேஜாவிடம் இருக்கும் தெளிவு கூட விராட் கோலியிடம் இல்லை – மீண்டும் சீண்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் அந்த தொடரில் முன்னிலை வகித்தது. அப்போது கடைசியாக நடைபெற இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணிக்குள் கொரோனா அச்சம் ஏற்பட்டதன் காரணமாக அந்த போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

INDvsENG

- Advertisement -

அதன்படி அப்போது ஒத்திவைக்கப்பட்ட அந்த போட்டியானது தற்போது ஜூலை ஒன்றாம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கு முன்னதாக ஏற்கனவே விராட் கோலி அணியின் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதால் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். ஆனால் இங்கிலாந்து வந்தடைந்து பயிற்சி போட்டியில் போது விளையாடிய ரோகித்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்போது பும்ரா தலைமையிலான இந்திய அணி இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.

அதன்படி தற்போது இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி முடித்த இந்திய அணியானது ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சிறப்பான சதம் காரணமாக முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியானது 284 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் தற்போது இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிசை விளையாடி வருகிறது.

kohli 1

இந்நிலையில் இந்த போட்டியின் போது பலத்தை எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 11 ரன்களில் ஆட்டம் இழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சதம் அடித்த தவறிவரும் அவர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் விராட் கோலியின் இந்த ஆட்டம் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ரேக்கர் அவரை ஜடேஜா உடன் ஒப்பிட்டு பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் விமர்சனத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இது குறித்து அவர் கூறியதாவது : ஜடேஜா இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார். அவர் ஆப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வந்து பந்துகளை விட்டு விட்டு ஆப் ஸ்டம்ப் லைனில் இருக்கும் பந்துகளை விளையாடினார். ஆனால் கோலி இந்த ஆட்டத்தில் அது போன்று விளையாடும் அளவிற்கு தெளிவு இல்லை என்றும் இனி அவருக்கு அதே போன்று விளையாட தெளிவு வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கலாம் என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs ENG : இப்படியா நடந்துகொள்வது, 2 ஜாம்பவான்களிடம் திட்டு வாங்கிய விராட் கோலி – ரசிகர்களும் அதிருப்தி, எதற்குனு பாருங்க

சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசிய ஒரு வீரரை இவ்வளவு மோசமாக விமர்சித்த சஞ்சய் மஞ்சரேக்கருக்கு எதிராக தற்போது ரசிகர்கள் அவரது சர்வதேச கிரிக்கெட்டில் நிகழ்ந்த சம்பவங்களை வைத்தும், அவரது தனிப்பட்ட ரெக்கார்டுகளை வைத்தும் அவரை அதிக அளவில் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement