இதை செஞ்சா போதும் சூரியகுமாரை அவுட்டாக்கலாம்.. பாகிஸ்தானுக்கு மஞ்ரேக்கர், வாசிம் அக்ரம் ஆலோசனை

sanjay manjrekar 2
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு காணப்படுகிறது. முன்னதாக இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இருப்பினும் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக அவர் இதுவரை சிறப்பாக விளையாடியதில்லை. எனவே இம்முறை அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைக்க முயற்சிப்பார் என்று நம்பலாம். சொல்லப்போனால் இம்முறை கேப்டனாக இருக்கும் அவருக்கு சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது.

- Advertisement -

சூரியகுமாரை அவுட்டாக்க:

இந்நிலையில் சூரியகுமாரை அவுட்டாக்க பாகிஸ்தான் பவுலர்கள் அவருடைய பேட் சுழற்றும் வேகத்தை விட வேகமாக பந்து வீச வேண்டும் என்று முன்னாள் சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக ஹரிஷ் ரவூப் போன்ற 140 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பவுலரை வைத்து சூரியகுமாரை அவுட்டாக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளரின் கேள்விக்கு அவர் கொடுத்த பதில் பின்வருமாறு.

“சூரியகுமார் நல்ல லென்த் மற்றும் நல்ல ஷார்ட் லென்த் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடியவர். ஏனெனில் பொதுவாக அவர் ரன்கள் அடிக்கக்கூடிய இடம் அவருக்கு பின்னே இருக்கும். எனவே ஹரிஷ் ரவூப் போன்ற பவுலர் வேகமாக ஓடி வந்து பந்து வீசும் போது சூரியகுமார் வெள்ளைக்கோட்டுக்குள் உள்ளே நகர்ந்து ஸ்டம்புக்கு நெருக்கமாக செல்வார். அப்போது பந்தை லாவகமாக அடிக்க அவருக்கு மிகவும் குறுகிய கோணம் மட்டுமே கிடைக்கும்” என்று கூறினார்.

- Advertisement -

இதான் சிறந்த வழி:

அப்படி அடிக்கும் போது சூரியகுமார் எட்ஜ் வாங்கி கேட்ச் கொடுக்க வாய்ப்பிருப்பதாக மஞ்ரேக்கர் தெரிவித்தார். சூரியகுமாரை அவுட்டாக்க அது சிறந்த திட்டம் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமும் தெரிவித்தார். இது பற்றி அதே நிகழ்ச்சியில் அக்ரம் பேசியது பின்வருமாறு. “அங்கே தான் ஹரிஷ் ரவூப் நம்முடைய திறமையை உணர வேண்டும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: புதிய பாகிஸ்தானுக்கு பயமில்ல.. அவங்கள மாதிரி இந்தியா மேட்ச் எங்களுக்கு பெருசில்ல.. இளம் வீரர் பேட்டி

“அதற்காக அவருக்கும் விக்கெட் கீப்பருக்கும் இடையே நல்ல திட்டமிடல் இருக்க வேண்டும். பந்தை கொஞ்சம் பிட்ச் மேலே போட்டால் சூரியகுமார் வெள்ளைக்கோட்டை பயன்படுத்தி பின்னோக்கி சென்று அடிப்பார்” என்று கூறினார். இங்கே பாகிஸ்தானுக்கு எதிராக சூரியகுமார் 5 டி20 இன்னிங்ஸில் 64 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement