புதிய பாகிஸ்தானுக்கு பயமில்ல.. அவங்கள மாதிரி இந்தியா மேட்ச் எங்களுக்கு பெருசில்ல.. இளம் வீரர் பேட்டி

Saim Ayub
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பாகிஸ்தானை காட்டிலும் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியாவிடம் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்துள்ளனர்.

மேலும் 8 முறை ஆசியக் கோப்பையை வென்றுள்ள இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியனாக திகழ்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி ரசிகர்களுக்கு தான் பெரியது என்று இளம் பாகிஸ்தான் வீரர் சாய்ம் ஆயுப் தெரிவித்துள்ளார். ஆனால் தங்களைப் பொறுத்த வரை இந்தியாவுக்கு எதிரான போட்டியும் மற்றொரு சாதாரணப் போட்டி என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

பயமற்ற பாகிஸ்தான்:

மேலும் பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற மூத்த வீரர்கள் இல்லாத தற்போதைய புதிய பாகிஸ்தான் அணி பயமற்ற கிரிக்கெட்டை விளையாடி எதிரணிகளை தோற்கடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஆயுப் பேசியது பின்வருமாறு. “நாங்கள் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் பயமற்ற கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கிறோம். ரசிகர்களின் பார்வையில் மட்டுமே இந்தியாவுக்கு எதிரான போட்டி பெரியது”

“ஆனால் ஒரு அணியாக நாங்கள் அப்படி பார்ப்பதில்லை. நாங்கள் அதை மற்றுமொரு சாதாரண போட்டியாகவே எடுத்துக் கொள்கிறோம். வீரர்களாக நாங்கள் ஒவ்வொரு நாளும் முன்னேற விரும்புகிறோம். அணியாக எங்கள் வீரர்களை ஒருவரை ஒருவர் நாங்கள் நம்புகிறோம். எங்களுடைய 15 பேர் கொண்ட அணியில் ஓரிருவர் மட்டும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை”

- Advertisement -

சாதாரண போட்டி:

“நாங்கள் ஒரு அணியாக சேர்ந்து முயற்சிகளைப் போடுகிறோம். கடந்த 3 – 4 மாதங்களாக கடந்த காலத்தைப் பார்த்து கற்றுக்கொண்டு முன்னோக்கி நகர்ந்து செல்லுமாறு எங்களுடைய அணி நிர்வாகம் செய்தி கொடுத்துள்ளார்கள். எனவே நாங்கள் கடந்த காலத்தை மட்டுமின்றி வருங்காலத்தையும் கருத்தில் கொண்டு கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது முக்கியமல்ல”

இதையும் படிங்க: 20 ஓவருக்கு 8 பேட்ஸ்மேன் தேவையா? அவரை விளையாட வைங்க.. பாகிஸ்தானை அபிஷேக் பாத்துக்குவாரு.. ஸ்ரீகாந்த்

“நாங்கள் எங்களுடைய தயாராகும் முறைகள் மற்றும் செயல்படுத்துதளில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் இத்தொடரை வெல்ல விரும்புகிறோம். அதனால் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. பும்ராவை எதிர்கொள்வது சவாலாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு பவுலரும் சவாலைக் கொடுப்பார்கள். அங்கே அணியாக நீங்கள் மேலே வந்து வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.

Advertisement