எவ்வளவு பயிற்சி எடுத்தாலும் வேலையாகாது.. ஃபார்முக்கு திரும்ப அந்த வீடியோக்களை பாருங்க.. சஞ்சய் பங்கர்

Sanjay Bangarn
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து 2வது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி கட்டாக் நகரில் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் சுமாராக விளையாடினார். அதனால் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததால் விமர்சனங்களை சந்தித்த அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடினார். ஆனால் 10 வருடங்கள் கழித்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடிய அவர் அரை சதம் கூட அடிக்காமல் ஏமாற்றத்தையே கொடுத்தார்.

- Advertisement -

தடுமாறும் இந்திய கேப்டன்:

அந்த சூழ்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டிலாவது அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 2 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார். இந்நிலையில் என்ன செய்தாலும் எவ்வளவு பயிற்சிகள் எடுத்தாலும் அசத்த முடியாது என்ற நிலையில் ரோஹித் சர்மா இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

எனவே அதீதமான பயிற்சிகளும் முயற்சிகளும் எடுப்பதை விட்டுவிட்டு கடந்தக் காலங்களில் அசத்திய போட்டிகளின் பழைய வீடியோக்களை பார்க்குமாறு அவர் ரோகித்தை அறிவுறுத்தியுள்ளார். அதைப் பார்த்து சிறப்பாக செய்த எந்த விஷயத்தை தற்போது தவற விட்டுள்ளோம் என்பதை கண்டறிந்து ரோகித் அசத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி சஞ்சய் பங்கர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பங்கர் அறிவுரை:

“ரன்கள் அடிக்கவில்லை என்ற நிலைக்கு தம்முடைய கேரியரில் ரோஹித் வந்துள்ளார். அது போன்ற நேரங்களில் பயிற்சிகளை எடுப்பது அதிகமாக பயனைக் கொடுக்காது. எனவே ரோஹித் சர்மா கொஞ்சம் தனிமையில் நேரத்தை செலவிட்டு வெற்றிகரமாக மகிழ்ச்சியைப் பெற்ற தருணங்களை திரும்பிப் பார்க்க வேண்டும். குறிப்பாக சில வீடியோக்களை பார்த்து எம்மாதிரியான செயல்முறைகள் மற்றும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம் என்பதை ரோகித் கண்டறிய வேண்டும்”

இதையும் படிங்க: 2 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

“சில நேரங்களில் ரிதத்தை நீங்கள் பெற வேண்டுமெனில் இது போன்ற விஷயங்கள் பெரிய உதவியை செய்யும். நீங்கள் கடந்தக் காலங்களில் உங்களுக்கு என்ன வேலை செய்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு தற்போதைய நிலையை அவர் அதிகமாக சிந்திக்கக் கூடாது” என்று கூறினார். அந்த வகையில் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபிக்கு முன் ரோஹித் ஃபார்முக்கு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement