இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது.
இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவன் இதோ :
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது கட்டாக் நகரில் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி நாளை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் நாளைய இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முதல் போட்டியின் போது முழங்கால் வலி காரணமாக இடம்பெறாத விராட் கோலி இரண்டாவது போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.
இதன் காரணமாக கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக விராட் கோலி பிளேயிங் லெவனில் இடம் பிடிப்பார். அதேபோன்று மற்றொரு மாற்றமாக தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதால் அவருடைய செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை சோதிக்கும் விதமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதன் காரணமாக அக்சர் பட்டேல் அல்லது ரவீந்திர ஜடேஜா இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி இணைக்கப்படுவார் என்று தெரிகிறது. மற்றபடி இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும் தெரிகிறது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : என்னை விட ரவீந்திர ஜடேஜா இந்த விடயத்தில் பெஸ்ட்.. ஆனா அவரை யாரும் பாராட்டல – ரவிச்சந்திரன் அஷ்வின்
1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) அக்சர் படேல், 8) வருண் சக்ரவர்த்தி, 9) குல்தீப் யாதவ், 10) ஹர்ஷித் ராணா, 11) முகமது ஷமி.



