என்னை விட ரவீந்திர ஜடேஜா இந்த விடயத்தில் பெஸ்ட்.. ஆனா அவரை யாரும் பாராட்டல – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin-and-Jadeja
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது சமூகவலைதள பக்கத்தின் மூலம் கிரிக்கெட் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார். அவரது இந்த கருத்துக்கள் பொதுவெளியில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவிச்சந்திரன் ரவிந்திர ஜடேஜா குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

என்னைவிட ரவீந்திர ஜடேஜா தான் பெஸ்ட் :

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜடேஜா 9 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். மேலும் பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங், பீல்டிங் என மூன்று வகையான துறையிலும் அசத்தும் அவர் தவிர்க்க முடியாத வீரராகவும் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தன்னைவிட ரவீந்திர ஜடேஜா திறமையான வீரர் என்றும் அவரை பெரிதாக யாரும் பாராட்டுவதில்லை என்றும் கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அஸ்வின் கூறுகையில் : ஜடேஜா நிச்சயம் என்னை விட ஒரு திறமையான வீரர். ஆனால் அவரை ஊடகங்கள் பாராட்டுவதில்லை.

இந்திய அணி தோற்கும் போதெல்லாம் அவரை எல்லாம் எல்லோரும் வில்லனாக பார்க்கிறார்கள். ஆனால் அவர் சிறப்பாக செயல்படும்போது யாரும் அவரை பாராட்டுவதில்லை. பந்துவீச்சில் அவர் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி பீல்டிங்கிலும் தனது முழு பங்களிப்பை வழங்குகிறார்.

- Advertisement -

அதுதவிர்த்து அழுத்தமான வேளைகளில் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். ஆனால் அவருக்கு போதுமான அங்கீகாரம் நாம் கொடுப்பதில்லை என அஸ்வின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். அஸ்வின் கூறியது போன்றே :

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு அடுத்து புதிய கேப்டன் சுப்மன் கில் இல்லை.. நிர்வாகம் எடுத்துள்ள புதிய முடிவு – விவரம் இதோ

ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 6000-க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரராக அண்மையில் வரலாற்று சாதனை புரிந்திருந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான அஷ்வின், ஹர்பஜன் சிங், கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்து இவரும் பந்துவீச்சு ஜாம்பவான் பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement