நாங்க நெனச்ச அளவுக்கு அவர் சூப்பரா விளையாடல. ராஜஸ்தான் சீனியர் வீரரை விளாசிய சங்கக்கரா

sangakaara
- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆட்டம் படு மோசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற 43வது லீக் போட்டியில் எவின் லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது சிறப்பான துவக்கம் காரணமாக ராஜஸ்தான் அணி முதல் 10 ஓவர்களில் நல்ல ரன் ரேட்டில் இருந்தது.

rajasthan royals
Rajasthan Royals IPL

11 வது ஓவரில் 100 ரன்னை கடந்த ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. அதன் பின்னர் நிச்சயம் ஒரு மிகப்பெரிய ரன் குவிப்புக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மீண்டும் ஒருமுறை மிடில் ஆர்டரில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 149 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணி குவித்தது.

- Advertisement -

அதன்பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின்போது ராஜஸ்தான் அணியின் சீனியர் வீரரான கிறிஸ் மோரிஸ் 4 ஓவர்களில் 50 ரன்னை விட்டுக் கொடுத்தது மிக மோசமான பவுலிங்கை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் விளையாடிய எந்த போட்டியிலும் இதுவரை அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்த.

Chris moris IPL
Chris moris IPL

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் சங்ககாரா கூறுகையில் : கிரிஸ் மோரிஸ் இந்த இரண்டாம் பாதியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார் என்பது அவருக்கே தெரியும். மேலும் அவர் இதுவரை இங்கு விக்கெட்டை வீழ்த்தவில்லை. அதுமட்டுமின்றி ரன்களையும் அதிகம் விட்டுக் கொடுக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது பாகத்தில் அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அது மட்டுமின்றி கடந்த மூன்று போட்டிகள் ஆகவே நிறைய ரன்களை அவர் விட்டுக் விட்டுக் கொடுத்திருக்கிறார். நான்கு ஓவர்களுக்கு 50 ரன்கள் கொடுப்பது எல்லாம் மிகவும் மோசமான பந்துவீச்சு.

இதையும் படிக்கலாமே: ஐ.பி.எல் தொடரில் இருந்து அதிரடியாக வெளியேறிய யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் – காரணம் இதுதான்

எங்கள் அணிக்காக அவர் சிறப்பான பங்களிப்பை அளித்து இருந்தாலும் இந்த இரண்டாம் பாதியில் சரிவர இல்லை என்று சங்கக்காரா தனது கருத்தை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட கிரிஸ் மோரிஸ் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமையும், சிறப்பான பௌலிங் செய்யும் திறமையும் உடைய ஆல்ரவுண்டர். இருப்பினும் அவரிடம் இருந்து எந்த ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்சும் இதுவரை வராதது ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடி என்றே கூறலாம்.

Advertisement