ஐ.பி.எல் தொடரில் இருந்து அதிரடியாக வெளியேறிய யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில் – காரணம் இதுதான்

chris gayle
chris gayle
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய 14-வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எஞ்சியுள்ள ஆட்டங்கள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகின்றன.

ipl trophy
IPL 2021

மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை நாற்பத்தி நான்கு போட்டிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இன்னும் சில வாரங்களில் முடிவடைய இருக்கும் இந்த ஐபிஎல் தொடர் தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்கும் முக்கியமான போட்டியில் மோத இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் பஞ்சாப் அணியில் இருந்து அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தான் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலக என்ன காரணம் என்பது குறித்தும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ChrisGayle
Chris Gayle

தொடர்ச்சியாக நான் பயோ பபுள் வளையத்திலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். எனவே எனக்கு மனரீதியான ஓய்வு தேவை. ஏனெனில் பயோ பபுள் வளையத்திற்குள் இருந்து தொடர்ந்து விளையாடுவது என்பது கடினமான ஒன்று. அதேபோன்று அடுத்து வரும் t20 உலகக்கோப்பை தொடருக்காக நான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட இருக்கிறேன்.

- Advertisement -

எனவே உலகக் கோப்பைத் தொடரில் என்னுடைய மனநிலையை சரியாக வைத்துக் கொள்ள நான் சற்று ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உலக கோப்பை தொடருக்காக மனரீதியாக தயாராக உள்ளேன்.

இதையும் படிக்கலாமே: புவனேஸ்வர் குமாரை விட இவர் சிறந்த பவுலர் நிச்சயம் டி20 உலக கோப்பையில் இருக்கவேண்டிய பவுலர் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து

எனவே எஞ்சியுள்ள இந்த போட்டிகளில் இருந்து விலகி நான் துபாயில் ஓய்வு எடுக்கப் போகிறேன் என்று விளக்கமளித்துள்ளார். மேலும் பஞ்சாப் அணி இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அனமையில் நடைபெற்று முடிந்த கரீபியன் லீக் போட்டிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் ஐ. பி.எல் என தொடர்ந்து பயோ பபுள் வளையத்திற்குள் கெயில் கிரிக்கெட் விளையாடி வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement