இந்திய அணியின் அறிமுக தொப்பியை பெற்றதும் கண்ணீர் விட்டு அழுத இளம் வீரர் – வைரலாகும் வீடியோ

Sandeep

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி டி20 தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக முதல் போட்டியில் விளையாடிய க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக அமைந்தது.

Krunal-1

ஏனெனில் அவருடன் சேர்ந்து நெருக்கமாக இருந்த 8 வீரர்களும் அணியில் இருந்து தனிமைப் படுத்தப் பட்டனர். இதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி ஐந்து பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்களுடன் களமிறங்கி விளையாடியது. இதனாலேயே இந்திய அணி தோல்வியை தழுவியது.

- Advertisement -

இரண்டாவது டி20 போட்டியின் போது இந்திய அணிக்கு 4 வீரர்கள் அறிமுக வீரர்களாக விளையாடி இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது போட்டியின்போது பீல்டிங் செய்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட முடியாமல் போனது.

sandeep warrier

அதன்படி அவருக்கு மாற்றாக சந்தீப் வாரியர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரான இவர் தமிழ்நாடு அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். கிட்டத்தட்ட 300 விக்கெட்டுகளை லிஸ்ட் ஏ மற்றும் முதல் தரப் போட்டிகளில் வீழ்த்தியுள்ள சந்தீப் வாரியர் முப்பதாவது வயதில் இந்த அறிமுக வாய்ப்பை கைப்பற்றினார்.

- Advertisement -

இதனால் மிகவும் மகழ்ச்சி அடைந்த அவர் இந்திய அணியின் அறிமுக தொப்பியை வாங்கும் போது கண்ணீர் விட்டு அழுதார். இது குறித்த வீடியோ தற்போது பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement