- Advertisement -
ஐ.பி.எல்

ஏற்கனவே அந்த டீம் இருக்குற நிலைமைல இதுவேறயா? ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேறிய – நட்சத்திர வீரர்

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த 2025 ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து முதல் அணியாக இந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் :

அந்த வகையில் நேற்று ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து பரிதாபமாக வெளியேறியது. இதுவரை இந்த தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி எட்டாவது தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

இதன் மூலம் அவர்கள் இனிவரும் 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை என்பதால் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளனர். இப்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த ஆண்டு மிக மோசமான ஒரு ஆண்டாக மாறியுள்ள வேளையில் எஞ்சியுள்ள தொடரில் இருந்து அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா காயம் காரணமாக வெளியேறுகிறார் என்றும் அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் குஜராத் அணிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியின் போது விரலில் காயமடைந்த சந்தீப் சர்மாவுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதியானதால் எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்து அவர் வெளியேறுகிறார் என்று அறிவித்துள்ளது.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரை பொருத்தவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். ஒட்டுமொத்தமாக 137 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 146 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதையும் படிங்க : அதை முடிவை எடுத்த அந்த 3 பேருக்குமே மூளை இல்லையா? ரிஷப் பண்ட் சர்ச்சையை சாடிய ஸ்ரீகாந்த்

ஏற்கனவே ராஜஸ்தான் அணி மோசமான நிலையில் பின்தங்கி இருக்கும் நிலையில் அவரது இந்த விலகல் அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -