ஹார்டிக் பாண்டியாவ டீம்ல ஏன் சேத்தாங்கன்னு இவங்க 2 பேர் தான் பதில் சொல்லனும் – சந்தீப்பாட்டீல்

- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது தனது முதலாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் படு மோசமான தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து தற்போது 2-வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதனால் இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய வீரர்களின் பிளேயிங் லெவன் குறித்த விவரம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

varun 1

- Advertisement -

ஏனெனில் முதல் போட்டியின்போதே ஹார்டிக் பாண்டியா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று பலரும் பேசி இருந்தனர். மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் விளையாடி வரும் பாண்டியா அணிக்கு தேவையில்லை என்றும் பலரும் தங்களது விமர்சனங்களை நேரடியாக முன்வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் ஹார்டிக் பாண்டியாவை டி20 உலக கோப்பை தொடரில் ஏன் சேர்த்தீர்கள் ? அவரைத் தேர்ந்தெடுத்தது தவறு என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

pandya

100% உடல் தகுதி இல்லாத ஒருவரை உலகக்கோப்பை அணியில் தேர்ந்தெடுத்தது தவறு. பாண்டியா அணிக்குள் எப்படி வந்தார் என்பது கோலி மற்றும் ரவி சாஸ்திரி, கிரிக்கெட் வாரியம் ஆகியோருக்கு மட்டுமே தெரியும். 100% உடல் தகுதி இல்லாத ஒரு வீரரை அணியில் சேர்ப்பதற்கு முன்பு உடற்தகுதி சான்றிதழை கேட்டு இருக்க வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : ஐ.சி.சி -யின் உத்தரவை வேண்டாம் என சொல்லி வீரர்களை கடற்கரைக்கு அழைத்துச்சென்ற தோனி – ஏன் தெரியுமா?

அப்படி இல்லாமல் அவரை அணியில் தேர்ந்தெடுத்தது தவறு. இதற்கு கோலியும் ரவிசாஸ்திரி பதில் சொல்லி ஆக வேண்டும் என சந்தீப் பாட்டீல் தனது கருத்துக்களை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதிலிருந்து ஹார்டிக் பாண்டியாவின் பெருமளவு அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement