ஐ.சி.சி -யின் உத்தரவை வேண்டாம் என சொல்லி வீரர்களை கடற்கரைக்கு அழைத்துச்சென்ற தோனி – ஏன் தெரியுமா?

Dhoni
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியது. அதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது லீக் போட்டியில் விளையாடவுள்ளது. துபாய் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே பாகிஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் கிட்டதட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் இந்த அரையிறுதி வாய்ப்பிற்கான இரண்டாவது இடத்திற்கு இந்தியா நியூசிலாந்து போன்ற அணிகள் போட்டியிடுகிறது.

Shaheen-afridi-1

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், நமீபியா போன்ற நான்கு அணிகளை வீழ்த்தியாக வேண்டும். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் பெரிதளவு எதிர்பார்க்கப்படும் விடயமாக மாறியுள்ளது. இப்படி இந்த முக்கியமான போட்டிக்கு முன்னர் வீரர்கள் தற்போது துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மைதானத்தில் பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திடீரென ஐசிசி இந்திய வீரர்களை துபாயிலிருந்து அபுதாபிக்கு சென்று பயிற்சியை மேற்கொள்ளுமாறு கூறியது. ஆனால் தோனி ஐசிசியின் அந்த உத்தரவை மறுத்து இந்திய வீரர்களை துபாய் பீச்சுக்கு அழைத்துச் சென்று அங்கு வாலிபால் விளையாடியுள்ளார். ஏனெனில் வீரர்கள் தற்போது தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து அபுதாபிக்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆகும். அதே போன்று திரும்பி வர இரண்டு மணி நேரம் ஆகும் இதனால் நான்கு மணி நேரங்கள் பயணித்தில் மட்டுமே வீணாகும்.

dhoni 1

இதனால் வீரர்களுக்கு உடல் சோர்வு மற்றும் மனச்சோர்வு ஆகியவை ஏற்படும் என்ற காரணத்தினால் இந்த பயிற்சியை வேண்டாம் என்று கூறிவிட்டு துபாய் பீச்சுக்கு சென்று வீரர்களுடன் வாலிபால் விளையாடியுள்ளார். இதன் மூலம் வீரர்களுக்கு மன அழுத்தம் குறைந்து போட்டிக்கு முன்னர் மனதளவில் தயாராக சரியாக இருக்கும் என்ற காரணத்தினால் இவ்வாறு செய்துள்ளார்.

dhoni 2

தோனியுடன் பல இந்திய வீரர்கள் துபாய் பீச்சுக்கு சென்று உள்ளனர். அதே போன்று சில பயிற்சியாளர்களும் அவருடன் சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளன. மேலும் போட்டிக்கு முந்தைய நாள் பயிற்சி போதும் என்று நினைத்து தோனி இவ்வாறு முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement