தோனியால் இந்திய கிரிக்கெட்டுக்கு பாதிப்பு. அந்த பூனைக்கு மணி கட்டப்போவது யார் ? – கடுமையாக விமர்சித்த சந்தீப் பாட்டில்

Sandeep

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று நீண்ட காலமாக கூறப்பட்டது. ஆனால் உலக கோப்பை முடிந்தும் தோனி இன்னும் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. மேலும் உலக கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் சில தொடர்களாக விலகியிருந்தாலும் அதன்பிறகு அணிக்கு தேர்வாகவில்லை.

Dhoni

மேலும் அவரது விருப்பம் தெரிவித்தாலும் இனிமேல் அணியில் சேர்க்கப்படுவாரா ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் தோனியை தாண்டி இந்திய அணி நகர்ந்து விட்டது என்றும் எங்களது விக்கெட் கீப்பர் பண்ட் தான் என்றும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது தோனி எப்போது மீண்டும் வருவார் என்ற கேள்விக்கு ரவிசாஸ்திரி ஐபிஎல் தொடர் முடிந்து தான் எதையும் கூற முடியும் என்று தெரிவித்திருந்தார்.

தோனியும் ஜனவரி மாதம் வரை என்னை எதுவும் கேட்காதீர்கள் என்று ஒரு பொது நிகழ்ச்சியில் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது தோனியை பற்றி விமர்சிக்கும் விதமாக முன்னாள் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவரான சந்தீப் பாட்டில் பரபரப்பான கருத்துக்களை கூறியிருக்கிறார். அதன்படி மகேந்திர சிங் தோனி என்ற பூனைக்கு மணி கட்டப் போவது யார் ? என்ற கவலை தேர்வுக்குழுவினர் இடையே தொடர்ந்து இருக்கிறது.

Sandeep 1

தோனி மற்றும் தேர்வுக் குழுவினர் தங்களது திட்டத்தை சொல்ல வேண்டிய கடமையில் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். தோனியால் இந்திய கிரிக்கெட் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. என் மனதில் தோனிதான் முதன்மை விக்கெட் கீப்பர் தேர்வு என்றும் ஒரு விஷயத்தை சந்தீப் பாட்டில் கூறினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒருவர் தொடர்ந்து நிலைத்திருக்க தரமான கிரிக்கெட் ஆட வேண்டிய நிலையில் தோனியின் விஷயத்தில் அது பெரிய கவலை என்றும் கடுமையான கருத்தினை கூறியுள்ளார் சந்தீப் பாட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -