இந்த பையன் இப்போவே சம்பவத்துக்கு ரெடியா இருக்கான்.. 13 வயது வீரரை பாராட்டிய – சஞ்சு சாம்சன்

Samson and vaibhav
- Advertisement -

2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது நடைபெற்று முடிந்துள்ள வேளையில் அடுத்ததாக உலக ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரானது இம்மாதம் 22-ம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனா கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்த்து அதன் சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது.

அந்த பையன் ரெடியா இருக்கான் : சஞ்சு சாம்சன்

அதேபோன்று மற்ற அணிகளும் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாட இருப்பதால் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தற்போது தங்களது சொந்த மைதானத்திற்கு வந்து பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது தங்களது சொந்த மைதானத்தில் தற்போது தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த ஆண்டு ஏலத்தில் 1 கோடியே 10 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட 13 வயதான இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி தங்களது அணியில் இணைந்ததை அந்த அணி வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது. 13 வயதான அவரின் செயல்பாடு எவ்வாறு இருக்கப் போகிறது? அவர் இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகமாவாரா? என்கிற பல்வேறு கேள்விகள் அவரை சுற்றி அதிகளவு விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வைபவ் சூர்யவன்ஷி தங்களது அணியில் இணைந்து குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : வைபவ் சூர்யவன்ஷி மிகவும் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். அவரால் பவர் ஹிட்டிங் செய்ய முடியுமா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் உள்ளது. ஆனால் நாங்கள் பார்த்தவரை எங்களுடைய அகாடமி மைதானத்தில் ஸ்டேடியத்தை விட்டு வெளியேயும் சிக்ஸர்களை பார்க்க விடுகிறார். அந்த அளவிற்கு அவரிடம் பவர் ஹிட்டிங் திறமை இருக்கிறது.

- Advertisement -

அவருடைய எதிர்காலத்தை புரிந்து கொண்டு நான் அவருக்கு ஒரு மூத்த சகோதரர் போல என்னுடைய ஆதரவை தொடர்ந்து வழங்க காத்திருக்கிறேன். மேலும் வீரர்களின் ஓய்வறையில் அவரை இயல்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் எங்களது ஒரு எண்ணமாக உள்ளது. இதுபோன்ற கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு நாம் எப்போதும் முழு ஆதரவாக இருக்க வேண்டும். அந்த வகையில் நாங்கள் அவரை தொடர்ச்சியாக ஆதரிக்க உள்ளோம்.

இதையும் படிங்க : 2027 ஒருநாள் உலககோப்பையை குறிவைத்து ரோஹித் சர்மா எடுத்துள்ள அதிரடி முடிவு – இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்

நிச்சயம் அவருக்கு இருக்கும் திறமைக்கு வெகுவிரைவில் இன்னும் சில ஆண்டுகளில் அவர் இந்திய அணியில் விளையாடுவார். தற்போது நான் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் அளவிற்கு தயாராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவர் பயிற்சியின்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் அடிக்கும் ஒரு சில ஷாட்கள் மிகவும் அபாரமாக உள்ளன என சஞ்சு சாம்சன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement