நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் கிரிக்கெட் டிராபி தொடரின் இறுதிப்போட்டியுடன் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என்று கடந்த சில வாரங்களாகவே பரவலாக பேசப்பட்டு வந்தது. ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துவிட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இன்னும் சில ஆண்டுகள் கவனம் செலுத்துவார் என்றும் பேசப்பட்டது.
அசத்தலான முடிவை கையிலெடுத்த ரோஹித் சர்மா :
ஆனால் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோகித் சர்மா தான் தற்போதைக்கு ஓய்வு பெறும் எந்த திட்டத்தையும் கையில் வைத்திருக்கவில்லை என்றும் ஓய்வு குறித்த எந்த எண்ணமும் தற்போது எனக்கு வரவில்லை என்றும் அந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்.
இதன் காரணமாக நிச்சயம் இன்னும் ஒரு சில ஆண்டுகள் ரோகித் சர்மா இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறார் என்பது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது 37 வயதுடைய ரோகித் சர்மா எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் 38 வயதை பூர்த்தி செய்ய இருக்கிறார். அதற்கு அடுத்து 2027-ம் ஆண்டு உலக கோப்பை தொடரின் போது அவருடைய வயது 40 ஆகிவிடும்.
எனவே ரோகித் சர்மா 40 வயதை வயது வரை விளையாடுவதற்காகவும், அடுத்த உலக கோப்பை தொடர் வரை தான் ஃபார்மில் கட்டு கோப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு முக்கிய முடிவு உடனே கையில் எடுத்துள்ளார். அது குறித்த தகவல் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் தன்னுடைய உடற்பகுதி மற்றும் பேட்டிங் ஃபார்ம் ஆகியவை சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அபிஷேக் நாயருடன் அவர் இணந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய அணியின் வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் பார்ம் தடுமாற்றத்தை சந்தித்தபோது அபிஷேக் நாயர்தான் அவர்களுக்கு உதவி இருந்தார். தற்போது இந்திய துணை பயிற்சியாளராக இருக்கும் அவருடன் ரோகித் சர்மா பயணித்து வரும் வேளையில் தனிப்பட்ட முறையில் அவருடன் அடுத்த இரண்டு ஆண்டுகள் தனிப்பட்ட முறையிலும் பயிற்சியெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : அவங்க 2 பேர் இந்திய அணியில் இருக்கும் வரை எதிரணியினர் இந்தியாவை பாத்தாலே பயப்படுவாங்க – திலீப் வெங்சர்க்கார்
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தனது உடற்தகுதி எவ்வாறு இருக்க வேண்டும்? பேட்டிங் பயிற்சிகள் எவ்வாறு இருக்க வேண்டும்? உணவு கட்டுப்பாடு எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்த பல்வேறு விஷயங்களில் அபிஷேக் நாயரின் அறிவுரை கேட்டு அவருடன் பயணித்து 40 வயது வரை விளையாட ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.