அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் குறித்தும் ஏமாற்றம் அளித்த வீரர்கள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான திலீப் வெங்சர்க்காரும் இந்த தொடரில் ஏமாற்றம் அளித்த சில வீரர்கள் குறித்தும், அசத்திய சில வீரர்கள் குறித்தும் தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.
அவங்க 2 பேரை பாத்தாலே மற்ற அணிகளுக்கு பயம் வரும் : திலீப் வெங்சர்க்கார்
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக செயல்பட்டாலும் அவர் இறுதிப் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்காமல் சென்றது வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் இந்திய அணிக்கு 69 ரன்கள் தேவை என்கிற நிலையில் 48 ரன்கள் சேர்த்த ஷ்ரேயாஸ் ஐயர் தேவையில்லாத முறையில் ஆட்டமிழந்தார் என்று நினைக்கிறேன்.
அவர் ஆட்டமிழந்த முறை எனக்கு சந்தோஷத்தை தரவில்லை. போட்டியை முடித்துக் கொடுக்கும் வரை அவர் களத்தில் நின்றிருக்க வேண்டும். அதேபோன்று கே.எல் ராகுல் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது ஐந்தாவது இடத்தை அவரிடம் வழங்க வேண்டும். ஏனெனில் அக்சர் பட்டேல் என்னதான் சிறப்பாக செயல்பட்டாலும் அவருடைய பேட்டிங் ஆர்டரில் எனக்கு விருப்பமில்லை.
வழக்கமான 5 ஆவது இடத்தில் ராகுல்தான் விளையாட வேண்டும். வலது கை, இடது கை வீரர்கள் காம்பினேஷன் காரணமாகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். ஆனாலும் ராகுல் முன்கூட்டியே விளையாடினால் அது இந்திய அணிக்கு பெரிய பலனை தரும் என்று நினைக்கிறேன்.
மேலும் தற்போதுள்ள இந்திய அணியில் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தை அளித்து வருகிறது. பெரிய போட்டிகளின் போது தாக்கத்தை ஏற்படுத்தும் அவர்கள் இருவரும் இந்திய அணியில் இருக்கும் வரை எந்த ஒரு எதிரணியும் இந்திய அணியை கண்டாலே பயந்து நடுங்கும்.
இதையும் படிங்க : யார் சொல்றதையும் கேக்காம இதையே தொடர்ந்து பண்ணுங்க.. தப்பே இல்ல.. ரோஹித்துக்கு ஆதரவு தெரிவித்த – ஏ.பி.டி
அதுமட்டும் இன்றி அவர்கள் இருவரும் பெரிய தொடர்களில் நிச்சயம் எதிரணியை மனதளவிலும், செயல்ளவிலும் நிலைகுலைய செய்வார்கள் என்றும் திலீப் வெங்சர்க்கார் கூறியது குறிப்பிடத்தக்கது. நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை இழந்த கையேடு அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெறுவார்கள் என்று பேசப்பட்ட வேளையில் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்துள்ளனர்.



