யார் சொல்றதையும் கேக்காம இதையே தொடர்ந்து பண்ணுங்க.. தப்பே இல்ல.. ரோஹித்துக்கு ஆதரவு தெரிவித்த – ஏ.பி.டி

ABD and Rohit
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவில்லையெனில் ரோகித் சர்மா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கடந்து சில வாரங்களாகவே அதிகளவு பேச்சுக்கள் இருந்து வந்தன. அதே வேளையில் இந்த தொடரில் வெற்றி பெற்றாலும் கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட இருக்கும் அவர் தானாக முன்வந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது.

ரோஹித் நீங்க யார் பேட்சையும் கேக்காதீங்க : ஏ.பி.டி ஆதரவு

அதோடு அனுபவ வீரரான அவர் இளம் வீரர்களுக்கு வழிவிடும் நேரம் வந்துவிட்டது என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய ரோகித் சர்மா : தற்போதைக்கு ஓய்வு குறித்த எந்த எண்ணமும் என்னிடம் இல்லை என்றும் தொடர்ந்து தான் விளையாடுவேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏ.பி டிவில்லியர்ஸ் மற்ற கேப்டன்களின் வெற்றி சதவீதத்தை விட ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றும் ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் சிறப்பாக விளையாடுவதால் தொடர்ந்து அவர் சர்வதேச போட்டிகளில் ஆட வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

ரோகித் சர்மா மற்ற கேப்டன்களை விடவும் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டனாக பெற்றிருக்கிறார். அதுமட்டும் இன்றி ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போதைக்கு அவர் ஓய்வு போவதில்லை என்று அறிவித்தது எனக்கு மகிழ்ச்சி தான். ஏனெனில் அவர் எதற்காக ஓய்வுபெற வேண்டும்?

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் கூட 83 பந்துகளை சந்தித்து 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு நல்ல அடித்தளத்தை அவர் அமைத்திருந்தார். அவர் இப்படி சிறப்பாக விளையாடி வரும் வேளையில் அவருக்கு ஓய்வுபெற அழுத்தம் கொடுப்பது தவறு. கடந்த 2022-ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி பல போட்டிகளில் வெற்றிக்கு காரணமாகவும் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் அசத்திய குல்தீப் யாதவ் அடைந்துள்ள முன்னேற்றம் – ஐ.சி.சி வெளியிட்ட அறிவிப்பு

ரோகித் சர்மாவை நினைத்து நாம் ரசிகர்களாக பெருமை கொள்ள வேண்டும். ஏனெனில் பல சவால்களைக் கடந்து வந்துள்ள அவர் அணியின் வெற்றிக்காக சுயநலமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே வெளியில் இருந்து வரும் எந்த ஒரு கருத்தையும் காது கொடுத்து கேட்காமல் தொடர்ந்து அவர் சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என ஏபிடி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement