இப்படி ஒரு டைவ் சேன்ஸ்ஸே இல்ல. அட்டகாசமான பீல்டிங் செய்த சாம்சன்

Samson-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 5 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகனாகவும், துவக்க வீரர் ராகுல் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் இளம் வீரரான சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா தனது துவக்க வீரர் இடத்தை அவருக்காக விட்டுக்கொடுத்து மூன்றாவது வீரராக களம் இறங்கப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி துவக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் வழக்கம்போல் பேட்டிங்கில் ஏமாற்றும் விதமாக 5 பந்துகளில் 2 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் சற்று முதிர்ச்சியடையாத வீரராக கருதப்படுகிறார். இருப்பினும் அவரிடம் இருக்கும் திறமை என்பது அபரிமிதமானது. அதிலும் குறிப்பாக நெற்றைய போட்டியில் அவர் பீல்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது.

பவுண்டரி லைனில் இருந்து சஞ்சு சாம்சன் நிச்சயம் சிக்ஸ்க்கு செல்லும் என்று எதிர்பார்த்த ஒரு பந்தை டைவ் அடித்து பிடித்து உள்ளே தூக்கிப் போட்டார். அவரின் அந்த அட்டகாசமான முயற்சியால் சிலர் ரன்களை அவர் சேமித்தார். அவரின் இந்த பீல்டிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சஞ்சு சாம்சன் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement