இன்னைக்கும் இவங்க ரெண்டு பேருக்கும் வாய்ப்பு கிடைக்காதாம். செண்டிமெண்ட் அப்படி – விவரம் இதோ

Samson-1

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறாமல் போனது. அடுத்து இரண்டாவது போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் தற்போது 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ind vs sl

இந்நிலையில் தற்போது தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் ஏற்படுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் இறுதிப்போட்டியான இந்த போட்டியில் இந்திய அணியில் மாற்றம் ஏதும் இருக்காது இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெற்றி பெறும்போது அணியை மாற்றக்கூடாது என்று சென்டிமென்ட் இந்திய அணியிடம் உள்ளது. அதனால் நீண்ட நாட்களாக வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே ஆகியோருக்கு இன்றும் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

Pandey-1

மேலும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக ஆடி வரும் மனீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு ஒரு வாய்ப்பு வழங்கி பார்க்கலாம் என்று ரசிகர்கள் கோரிக்கைகளை வைத்துவருகின்றனர். ஏனெனில் இலங்கை அணியை வீழ்த்தும் பலம் இந்திய அணியிடம் நிறையவே உள்ளதால் இவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளித்து பார்க்கலாம் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

- Advertisement -

samson

ஆனால் இன்று இறுதிப்போட்டி என்பதாலும், மேலும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி கச்சிதமாக வெற்றி பெற்றதால் இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே அணியை இன்றைக்கு கோலி பயன்படுத்துவார் என்று தெரிகிறது. இதனால் இன்றும் மனிஷ் பாண்டே மற்றும் சாம்சன் ஆகியோர் வாய்ப்புக்காக வெளியே காத்திருக்க வேண்டியதுதான் என்பது நிதர்சனமான உண்மை.