IND vs SL : சம்சு சாம்சனுக்காக ரிஷப் பண்டிற்கு ஆப்பு வைத்த பி.சி.சி.ஐ – இதுதான் கரெக்ட்

Samson
- Advertisement -

அண்மையில் பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் தற்போது நாடு திரும்பிய இந்திய அணியானது அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடயிருக்கிறது.

IND-vs-BAN

- Advertisement -

அந்தவகையில் ஜனவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வெளியாடுகிறது. அதன்படி ஜனவரி 3 ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது ஜனவரி 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் ரோஹித் சர்மா காயம் காரணமாக இடம்பெறமாட்டார் என்று தெரிகிறது. அதேபோன்று கே.எல் ராகுல் மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக கழற்றிவிடப்படவுள்ளார். அதேபோன்று மேலும் சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து அவர்களுக்கு பதிலாக இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக பாண்டியா செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.

samson

இந்நிலையில் இந்த இலங்கை அணிக்கெதிரான தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கழற்றிவிடப்பட்டு அவருக்கு பதிலாக வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க உள்ளதாக பி.சி.சி.ஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சொதப்பி வருகிறார்.

- Advertisement -

அதன்காரணமாக டி20 மற்றும் ஒருநாள் அணியில் அசத்தி வரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சமீப காலமாகவே சஞ்சு சாம்சனுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவுகள் பெருகி வரும் வேளையில் பி.சி.சி.ஐ எடுத்துள்ள இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

இதையும் படிங்க : முந்தைய சீசனில் பெரிய கோடிகளை வாங்கினாலும் 2023 சீசனில் திடீரென பல மடங்கு சம்பளம் குறைவாக பெற்ற 4 வீரர்களின் பட்டியல்

மேலும் சமீபத்தில் உள்ளநாட்டு தொடர்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய சிலருக்கும் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதன்படி இந்த இலங்கை அணிக்கெதிரான தொடருக்கான இந்திய அணி இன்று மாலை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement