வைபவ் சூர்யவன்ஷி 15 வயதிலேயே அசத்த இதுதான் காரணம்.. ராஜஸ்தான் கோச் – குமார் சங்கக்காரா பேட்டி

Vaibhav Sooryavanshi and Sangakkara
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரராக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 14 போட்டியிலே விளையாடி 750-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 2026 ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்களை அடிக்க வீரராக முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷி அசத்த இதுவே காரணம் : சஞ்சய் மஞ்சரேக்கர்

இவ்வேளையில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய முதன்மை அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காகவும் அறிமுகமாகி அசத்துவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இவ்வேளையில் அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக பேசியுள்ள ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா சூர்யவன்ஷியின் திறன் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : வைபவ் சூர்யவன்ஷி எதிர்காலத்தில் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராகவும் பிரபலமாகவும் மாறப்போகிறார் எனவே அவர் விளம்பரம் வெளிச்சத்தையும், ஆட்டத்தையும் சமநிலையமாக கொண்டு செல்ல வேண்டியது அவசியம். என்னை பொறுத்தவரை புகழ், அந்தஸ்து, சாகசம் என எதுவுமே அவரை பெரிதாக பாதிக்காது. ஏனெனில் அவர் எதார்த்தமாக இருக்கிறார்.

மேலும் எதையும் கற்றுக் கொள்ளவும் விருப்பமாக இருக்கிறார். வைபவ் மனரீதியாக மிக வலிமையானவர் என்பதால் தான் அவரது பேட்டில் இருந்து ரன்கள் தொடர்ந்து வருகின்றன. அதற்கு உதாரணத்தை என்னால் கூற முடியும். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் போது 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி எங்கள் அணி களமிறங்கும் போது :

- Advertisement -

இதையும் படிங்க : 2027 உலககோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? – சஞ்சய் மஞ்சரேக்கர் பதில்

மைதானத்தின் வெளியே அவர் என்னை பார்த்து நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் நாம் இந்த போட்டியில் வெற்றி பெறப்போகிறோம் என்று சொல்லிவிட்டு தான் களத்திற்கு சென்றார். அப்படி மனரீதியாக மிக வலிமையாக இருப்பதினாலே அவரால் ரன்களை குவிக்க முடிகிறது என குமார் சங்கக்காரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement