2027 உலககோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவாரா? – சஞ்சய் மஞ்சரேக்கர் பதில்

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏற்கனவே ஓய்வினை அறிவித்துவிட்டார். அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை தான் விளையாட வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்துவிட்டு தொடர்ந்து இந்திய அணியுடன் பயணித்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ரோஹித் சர்மாவின் இடம் குறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர் :

ஆனாலும் அவரது வயது மற்றும் பிட்னஸ் காரணமாக அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவாரா? என்பது குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் ரோகித் சர்மாவின் இடம் குறித்த கேள்விக்கு சில கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா விளையாடுவாரா? என்று கேட்டால் நான் விளையாட மாட்டார் என்று கருதுகிறேன். ஏனெனில் தற்போது 2026-ஆம் ஆண்டு பிற்பாதியில் நாம் இருக்கிறோம். அடுத்த ஆண்டு உலக கோப்பை 2027 பிற்பாதியில் நடக்கிறது. விராட் கோலியை பொருத்தவரை எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.

ஏனெனில் அவர் இன்றளவும் மிகச் சிறப்பான பிட்னஸில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதனால் அவரது அந்த இடம் நிச்சயம் உறுதி. அதேவேளையில் ரோகித் சர்மாவை நாம் எளிதாக கணக்கில் கொள்ளக்கூடாது. ஏனெனில் ரோகித் சர்மாவை விளையாட வைப்பதை விட அடுத்த 5-10 ஆண்டுகளுக்கு சிறப்பாக செயல்படப்போகும் வீரரை தேர்வு செய்து ரோகித் சர்மாவின் இடத்தை அவருக்கு வழங்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : இன்னும் 2 சிக்ஸர் போதும்.. சர்வதேச டி20 போட்டிகளில் 5 ஆவது இந்திய வீரராக அபிஷேக் சர்மா – நிகழ்த்தவுள்ள சாதனை

அதுதான் சரியான முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் ரோகித் சர்மாவின் பெயருக்காக இடத்தை வழங்குவதை விட இந்திய அணியின் நலனுக்கு எது சிறந்ததோ அதனை கருத்தில் கொண்டு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement