முந்தைய சீசனில் பெரிய கோடிகளை வாங்கினாலும் 2023 சீசனில் திடீரென பல மடங்கு சம்பளம் குறைவாக பெற்ற 4 வீரர்களின் பட்டியல்

Rahul tewatia Odean Smith
- Advertisement -

ஐபிஎல் 2023 தொடர் வரும் மார்ச் – மே மாதம் வரை இந்தியாவில் நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் கொச்சியில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில் தற்சமத்தில் நல்ல பார்மில் இருப்பதுடன் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் அசத்தக்கூடிய ஷாம் கரண், பென் ஸ்டோக்ஸ் கேமரூன் கிரீன் ஆகியோர் 15+ கோடிகளுக்கு விலை போனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதே சமயம் சமீப காலங்களில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் 16 கோடி என்ற பெரிய தொகைக்கு லக்னோ அணிக்கு வாங்கப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் அமைந்தது.

Sam-Curran

- Advertisement -

பொதுவாக குதிரை பந்தயத்தை போல் சிறப்பான ஃபார்ம் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்தே ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும். அதில் கடந்த வருடம் சில வீரர்கள் சுமாராக ஓடிய குதிரைகளை போல் செயல்பட்டதால் தரம் இருந்தும் 2023 ஏலத்தில் மிகவும் குறைவான விலைக்கு ஏலம் போனார்கள். அந்த வகையில் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பது போல் முந்தைய சீசனில் பெரிய தொகைக்கு விலை போன சில வீரர்கள் 2023 சீசனில் பன்மடங்கு மிகவும் குறைந்த விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களைப் பற்றி பார்ப்போம்

4. கேன் வில்லியம்சன்: நவீன கிரிக்கெட்டில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் நியூசிலாந்தின் கேப்டனாகவும் அசத்திய இவர் உலக அளவில் நட்சத்திர வீரர்களில் இப்போதும் ஒருவராக போற்றப்படுகிறார். இருப்பினும் கடந்த வருடம் சந்தித்த எல்போ காயத்தால் பழைய பன்னீர்செல்வமாக அசத்த முடியாமல் தவிக்கும் அவர் 2022 சீசனில் ஹைதராபாத் அணியின் கேப்டனாக 14 கோடிக்கு 13 போட்டிகளில் வெறும் 216 ரன்களை எடுத்து சுமாராக செயல்பட்டார்.

williamson 1

குறிப்பாக முன்பு போல் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறும் அவர் பழைய மவுசு மற்றும் ஃபார்மை இழந்ததால் இந்த வருடம் வெறும் 2 கோடி என்ற அடிப்படை விலைக்கு குஜராத் அணியில் வாங்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

3. ஓடீன் ஸ்மித்: வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் 2022இல் சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் கடைசி நேரத்தில் சரவெடியாக பேட்டிங் செய்து வெற்றிக்கு போராடியது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

PBKS vs RCB2 Odean Smith Shahrukan

அதனால் கடந்த வருடம் 6 கோடி என்று பெரிய தொகைக்கு பஞ்சாப் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் 6 போட்டிகளில் வெறும் 51 ரன்களையும் 6 விக்கெட்டுகளையும் எடுத்து சுமாராக செயல்பட்டார். அதனால் 2023 சீசனுக்கான ஏலத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்ட அவர் வெறும் 50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு குஜராத் அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

2. ஜே ரிச்சர்ட்சன்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் தற்சமயத்தில் உலக அளவில் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அதனால் கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக முதல் முறையாக 14 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கப்பட்ட அவர் 3 போட்டிகளில் வாய்ப்பு பெற்று 3 விக்கெட்களை 10.63 என்ற சுமாரான எக்கனாமியில் எடுத்தார்.

richardson

இருப்பினும் அதன் பின் காயத்தால் கடந்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய அவர் குணமடைந்த பின் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு விலை போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை வாங்குவதற்கு எந்த அணியும் முன் வராத நிலையில் வெறும் 1.5 கோடி என்ற அடிப்படை விலைக்கு மும்பை நிர்வாகம் வளைத்து போட்டு அசத்தியது.

- Advertisement -

1. கெய்ல் ஜமிசன்: நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இவர் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற முக்கிய தொடர்களில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி உலக அளவில் கவனம் ஈர்த்தார்.

jamieson

இதையும் படிங்க:அன்பார்ந்த இந்திய ரசிகர்களே, ஏன் அப்படி விமர்சித்தேன்னா – இந்தியா மீது திடீர் அன்புடன் ரமீஸ் ராஜா பேசியது என்ன

அதனால் 2021 சீசனில் 15 கோடிக்கு பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்ட அவர் 9 போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்து சுமாராக செயல்பட்ட நிலையில் 2022 சீசனில் காயத்தால் பங்கேற்கவில்லை. அந்த நிலையில் இந்த வருடம் பங்கேற்ற அவர் பெரிய தொகைக்கு விலை போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த அணியும் வாங்க முன்வராத காரணத்தால் 2 கோடி என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.

Advertisement