இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று பெல்பாஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் அயர்லாந்து அணியானது விளையாடி வருகிறது.
2 புதுமுக வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு :
இந்நிலையில் இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள் பிளேயிங் லெவனில் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த போட்டியின் போது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் சூரியான்ஷ் ஷெட்கேவிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த போட்டியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரின்ஸ் யாதவிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு வீரர்களுக்கு இன்று இந்திய அணிக்கான டி20 அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதேவேளையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் காத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்றைய போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியிலே வைபவ் சூர்யவன்ஷி விளையாடியிருக்க வேண்டும் என்று பலரும் தனது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இரண்டாவது போட்டியிலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷி 15 வயதிலேயே அசத்த இதுதான் காரணம்.. ராஜஸ்தான் கோச் – குமார் சங்கக்காரா பேட்டி
ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



