7-8 வயசு இருக்கும்போதே ரெய்னா எனக்கு அந்த கிஃப்ட் குடுத்தாரு – சி.எஸ்.கே அணிக்காக தேர்வான சமீர் ரிஸ்வி நெகிழ்ச்சி

Sameer-Riswi
- Advertisement -

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது துபாயில் நடைபெற்று முடிந்த 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகளவில் இருந்தது. ஏனெனில் சென்னை அணியில் விளையாடும் வீரர்கள் விரைவிலேயே பெரிய புகழையும் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு ஆதரவையும் பெறுவார்கள் என்பதால் சென்னை அணிக்கு புதிதாக வரப்போகும் வீரர்கள் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் இருந்தது.

அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியானது நியூசிலாந்து அணியை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டான ரச்சின் ரவீந்த்ராவை 1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. அவரைத் தொடர்ந்து கொல்கத்தா அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஷர்துல் தாகூரை மீண்டும் 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து சென்னை அணியில் இணைத்துள்ளது.

- Advertisement -

இவர்களோடு சேர்த்து மூன்றாவதாக நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான டேரல் மிட்சலை 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் சில வீரர்களை சென்னை அணி எடுத்திருந்தாலும் 20 வயது இளம் வீரர் ஒருவரை அதிக விலைக்கு சி.எஸ்.கே வாங்கியது அனைவரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியது.

அந்த வகையில் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வரும் 20 வயதான உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி என்கிற வீரரை பெரிய வீரர்களுக்கு மத்தியில் 8 கோடியே 40 லட்சம் கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படி சர்வதேச அளவில் அனுபவம் இல்லாத ஒரு வீரரை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியதால் அவர் குறித்த தேடலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது சமீர் ரிஸ்வி தனது சமூகவலைதள பக்கத்தின் மூலம் சுரேஷ் ரெய்னாவுடன் ஏற்பட்ட முதல் அனுபவம் குறித்த ஒரு பதிவை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் சுரேஷ் ரெய்னாவுடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் தற்போது சமீபத்தில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தையும் பதிவிட்ட அவர் அதில் குறிப்பிட்டதாவது :

இதையும் படிங்க : அஷ்வினுக்கு இடம் இருக்கா? தெ.ஆ முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது பிளேயிங் லெவனை வெளியிட்ட கவாஸ்கர்

2011-ம் ஆண்டின் போது எனக்கு 7-8 வயது இருக்கும் அப்போது ரெய்னா ரஞ்சிக்கோப்பையில் விளையாட வந்திருந்தார். அந்த நேரத்தில் நான் அந்த மைதானத்தில் பால் பாயாக இருந்தேன். அப்போது அவர் என்னை அழைத்து அவர் பேட்டிங் செய்யும்போது பந்துவீச சொன்னார். மேலும் ஒரு இன்னிங்ஸ்க்கு பிறகு ஸ்லிப் பகுதியில் நின்று கேட்சிங் பயிற்சியை மேற்கொண்டு இருந்தார். மேலும் என்னையும் அழைத்து அவர் அந்த பயிற்சியில் ஈடுபட வைத்தார். அவரை நான் முதல் முறையாக சந்தித்தபோதே எனக்கு அவருடைய சன் கிளாஸ்ஸை பரிசளித்தார். அதுதான் அவரை நான் நேரில் சந்தித்த முதல் தருணம் நெகிழ்ச்சியான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement