ரோஹித்தின் குழந்தைக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அளித்த அழகிய பரிசு – புகைப்படம் இதோ

Samaira

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரும், இந்திய அணியின் துணை கேப்டனாக ரோகித் சர்மா ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையில் கடந்த ஆண்டு மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரோஹித்துக்கும் அவரது மனைவிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் சில மாதங்களுக்கு முன் அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தோனியின் பெண் குழந்தைக்கு அடுத்து தற்போது ரோஹித்தின் பெண் குழந்தை குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் ரோஹித்தின் குழந்தைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அழகிய பரிசு ஒன்றினை அளித்துள்ளது. அது யாதெனில் மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸி ஒன்றினை ரோஹித்தின் குழந்தையின் அளவிற்கு தயார் செய்து அதன்மீது சமைரா என்று ரோஹித்தின் குழந்தை பெயர் பதிக்கப்பட்ட டி-ஷர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த டீசர்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.