- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பட்லருக்கு அடுத்து பும்ராவை இப்படி செய்த இரண்டாவது பேட்ஸ்மேன் சாம் கோன்ஸ்டாஸ் மட்டும் தான் – விவரம் இதோ

இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரராக இருந்த நாதன் மெக்ஸ்வீனி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய வீரராக 19 வயதுடைய சாம் கோன்ஸ்டாஸ் ஆஸ்திரேலியா அணியில் இணைக்கப்பட்டார்.

பும்ராவை புரட்டிய சாம் கோன்ஸ்டாஸ் :

அப்படி இணைக்கப்பட்ட அவர் தற்போது மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் “பாக்சிங் டே” போட்டியில் அறிமுகமாகி விளையாடி வருகிறார். அந்த வகையில் டிசம்பர் 26-ஆம் தேதி நேற்று துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 60 ரன்கள் குவித்து அசத்தினார்.

19 வயதுடைய இளைஞன் ஒருவர் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக இப்படி ஒரு இன்னிங்ஸை தனது முதல் போட்டியிலேயே விளையாடியது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் பும்ராவிற்கு எதிராக அவர் செய்த செயல் ஒன்று தற்போது மிகப்பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் உலகின் தலைசிறந்த பவுலரான பும்ராவை முன்னணி பேட்ஸ்மேன்களே எதிர்கொள்ள திணறி வரும் வேளையில் இந்த போட்டியில் அவர் பும்ராவிற்கு எதிராக இரண்டு சிக்ஸர்களை அடித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் ஜாஸ் பட்லருக்கு பிறகு ஒரே இன்னிங்சில் பும்ரா ஓவரில் இரண்டு சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை கோன்ஸ்டாஸ் படைத்துள்ளார்.

இதையும் படிங்க : இப்படியா வேஸ்ட் பண்ணுவீங்க.. நம்பலன்னா எதுக்கு எடுக்குறீங்க.. ரோஹித் கேப்டன்ஷிப்பை விளாசிய ரவி சாஸ்திரி

இதற்கு முன்னதாக கடந்த 2018-ஆம் ஆண்டு ஜாஸ் பட்லர் ஓவல் மைதானத்தில் பும்ராவிற்கு எதிராக டெஸ்ட் இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்களை விளாசியிருந்தார். அதற்கு அடுத்து அந்த சாதனையை செய்த வீரர் சாம் கோன்ஸ்டாஸ் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -