இப்படியா வேஸ்ட் பண்ணுவீங்க.. நம்பலன்னா எதுக்கு எடுக்குறீங்க.. ரோஹித் கேப்டன்ஷிப்பை விளாசிய ரவி சாஸ்திரி

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் முதல் போட்டியில் இந்திய அபார வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோகித் தலைமையில் மோசமாக தோற்ற இந்தியா மூன்றாவது போட்டியை போராடி டிரா செய்தது. அந்த நிலையில் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்ன் நகரில் துவங்கியது.

அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து அசத்தியது அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக இந்தப் போட்டியில் முதல் நாளில் 311-6 என தடுமாறிய ஆஸ்திரேலியாவை இரண்டாவது நாளில் புதிய பந்தில் இந்தியா விரைவாக அவுட் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சுமாரான கேப்டன்ஷிப்:

ஆனால் வழக்கம் போல பும்ரா ஒருபுறம் கட்டுப்பாட்டுடன் பந்து வீசிய நிலையில் எதிர்புறம் சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் சுமாராக பந்து வீசி ரன்களை கொடுத்தார்கள். அதே போல ரோகித் சர்மாவும் ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தாமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்தார். அது பற்றி ரவி சாஸ்திரி நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு.

“இந்திய அணி ஐடியா இல்லாமல் ஓடுகிறது. பவுலிங் சுமாராகவே இருக்கிறது. ஸ்பின் பவுலிங் பயன்படுத்த வேண்டிய அளவுக்கு பயன்படுத்தப்படவில்லை. 40 ஓவர்கள் பின்பு தான் வாஷிங்டன் சுந்தர் வருகிறார். ஒருவேளை நீங்கள் 2 ஸ்பின்னர்களை நம்பாவிட்டால் எதற்காக அணியில் தேர்ந்தெடுத்தீர்கள்” என்று விமர்சித்தார். அதே போல ஆகாஷ் தீப் புதிய பந்தை சரியாக பயன்படுத்தாதவர்கள் பற்றி சுனில் கவாஸ்கர் விமர்சித்தது பின்வருமாறு.

- Advertisement -

சுமாரான பவுலிங்:

“மிகவும் சுமாரான பவுலிங். நீங்கள் பவுன்சர் வீச வேண்டுமானால் அதை ஹெல்மெட் உயரத்திற்கு வீச வேண்டும். இடுப்பு உயரத்திற்கு போடக்கூடாது. அதை இந்திய அணி செய்யாததை பார்த்து எனக்கு ஏமாற்றம். மன்னிக்கவும் ஏன் நீங்கள் புதிய பந்தை வீணடித்து விட்டீர்கள். ஆகாஷ் தீப் புதிய பந்தை அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பகுதிகளில் அதிகமாக வீசி அதை வீணடித்து விட்டார்”

இதையும் படிங்க: ஆஸியின் அந்த சீட்டிங்கை விட மோசமில்ல.. விராட் கோலியை அவமதித்த பத்திரிகைக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

“இந்திய அணி ஃபீல்டிங் செய்வதிலும் சுமாராகவே இருந்தது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து பேட்டிங் துறையிலாவது சிறப்பாக விளையாடி வெற்றி பெற இந்திய அணி போராடி வருகிறது. அந்த வாய்ப்பில் கேப்டன் ரோஹித் மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் மற்ற பேட்ஸ்மேன்களாவது இந்திய அணிக்கு கை கொடுப்பார்களா என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Advertisement