- Advertisement -
ஐ.பி.எல்

மொதல்ல ரசிகர்களிடம் தான் மன்னிப்பு கேக்கனும்.. பெங்களூரு அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – சாம் கரன் வருத்தம்

தரம்சாலா நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் போட்டியில் விளையாடிய சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை குவித்தது. பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 92 ரன்களையும், ராஜத் பட்டிதார் 55 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே குவித்ததால் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் கூறுகையில் : இந்த தொடர் முழுவதுமே பல்வேறு பாசிட்டிவான விடயங்களை நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம். இந்த போட்டியில் வெற்றி எல்லையை கடக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது.

- Advertisement -

இந்த தொடர் முழுவதுமே எங்களது அணி ஒரு சிறப்பான தைரியமான அணியாகவே இருந்துள்ளதாக நினைக்கிறேன். இந்தத் தொடரின் பிளே ஆப் வாய்ப்பை நாங்கள் இழந்தாலும் நாங்கள் விளையாடிய விதம் குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு போட்டியிலுமே பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டுள்ளோம்.

இதையும் படிங்க : ரோசவ்’க்கு சரியான பதிலடி கொடுத்தாரு.. இந்தியாவின் நலனுக்காக விராட் கோலி இதை செய்யனும்.. கும்ப்ளே பாராட்டு

இந்த தொடரின் சில போட்டிகளில் கேப்டனாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் சில வெற்றிகள் கிடைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதேபோன்று இந்த தொடரில் மிகப்பெரிய சேஸிங்கையும் நாங்கள் செய்துள்ளோம். இந்த வருடம் எங்களது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிச்சயம் நாங்கள் மீண்டும் பலமாக திரும்புவோம் என சாம் கரண் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -